உலர்தாவரக சுட்டுநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலர்தாவரக சுட்டுநூல் (Index Herbariorum) என்பது பல நாடுகளில் இருக்கும் உலர் தாவரங்களைக் குறித்த பெயர்விவரங்கள் அடங்கிய நூல் ஆகும். ஒவ்வொரு உலர்தாவரங்களில் பணியாற்றும் பணியாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் குறித்தவைகள் ஒரே நூலில் இருப்பது, மேலும் அதே நூலின் விவரங்கள், ஒரு இணைய ஆவணமாக, தேடும் வசதியோடு இருக்கும் போது, எளிதாக ஒரு ஆய்வாளர் தேடி எடுக்க இயலுகிறது. 1952 முதல் 1974 வரை ஆறு பதிப்புகளில் இந்த உலர் தாவரக நூல் வந்துள்ளது. இந்த ஆறு பதிப்புகளுக்கான நிதி வசதியை தாவர வகைப்பாட்டியலுக்கான பன்னாட்டு கூட்டமைப்பு (International Association for Plant Taxonomy) வழங்கியது. 1997 ஆம் ஆண்டு, இந்நூலின் விவரங்கள் இணையத்தின் வழி அணுகலைப் பெற்றன.[1] இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஐக்கிய நாட்டிலுள்ள நியூயார்க் தாவரவியல் பூங்கா, இப்பதிப்புகளைப் பேணும் பொறுப்பினை ஏற்றது. குறிப்பாக 6, 7, 8 பதிப்புகளைத் தொகுக்கும் பணியில், இத்தாவரவியல் பூங்காவின் இயக்குநராக இருந்த பாட்ரிக்கா என்ற பெண்மணி சிறந்த பணிகளைச் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Index Herbariorum". sweetgum.nybg.org. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்தாவரக_சுட்டுநூல்&oldid=3921831" இலிருந்து மீள்விக்கப்பட்டது