உலக முட்டை எறிதல் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக முட்டை எறிதல் கூட்டமைப்பு
World Egg Throwing Federation
சுருக்கம்உ.மு.எ.கூ
உருவாக்கம்2006
நோக்கம்இங்கிலாந்தில் முட்டை எறிதல் விளையாட்டை ஊக்கப்படுத்த
தலைமையகம்இலிங்கன்சையர், சுவாட்டன்
சேவை பகுதி
ஐக்கிய இராச்சியம்
வலைத்தளம்http://www.eggthrowing.com

உலக முட்டை எறிதல் கூட்டமைப்பு (World Egg Throwing Federation) முட்டை எறியும் விளையாட்டை ஊக்குவிக்கும் ஓர் அமைப்பாகும்.[1][2] உருசிய முட்டைச் சூதாட்டம், எறிதலும் பிடித்தலும், அசைவற்ற அஞ்சல், இலக்கு வீசுதல், முட்டைக் கவட்டை உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட வகை முட்டை விளையாட்டுகளை இக்கூட்டமைப்பு ஊக்குவிக்கிறது.

வன்முறைக்கிளர்ச்சிக்காக முட்டைகளைப் பயன்படுத்துவதை இந்த அமைப்பு எதிர்க்கிறது.[3] ஆண்டுதோறும் இங்கிலாந்தின் சுவாட்டன் என்ற ஊரில் சாம்பியன் பட்டப் போட்டி நடைபெறுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சாம்பியன் பட்டப் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Rowntree's Randoms Egg Throwing Championships - Swaton 28 June" பிபிசி-Lincolnshire, June 2009
  2. "Teams scramble to egg competition". BBC News. 2006-06-25.
  3. Dwight Perry (2006-05-10). "Hey gamblers, here's an egg-cellent idea". The Seattle Times.
  4. Pete McEntegart (2006-05-08). "The IO spot". Sports Illustrated. Archived from the original on September 15, 2006.

புற இணைப்புகள்[தொகு]