உள்ளடக்கத்துக்குச் செல்

உலக உணவு மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் உலக உணவு மாநாடு (World Food Conference) 1974ஆம் ஆண்டில் உரோம் நகரில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்கீழ் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வங்கதேசம் நாட்டில் பேரழிவுகரமான பஞ்சத்தை அடுத்து இம்மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டின் முக்கியமான, மிகப்பிரபலமான அறிக்கையானது, அப்போதிருந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலச் செயலாளா் ஹென்றி கிசிங்கர் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எந்த குழந்தையும் பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என உறுதியளிக்கப்பட்டது. இந்த தைரியமான அறிவிப்பு எந்த வகையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இலக்கு அடையத்தக்கது தானா? என்ற விவாதத்தை உலக அரங்கில் முன் வைத்ததோடு மட்டுமல்லாமல் இது தொடர்பான அறிவியல் முறையிலான ஆய்வுகளையும் தொடங்க முன்னோடியானது.

உலக உணவு மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள், பசி மற்றும் சத்துக்குறைபாட்டினை ஒழிப்பதற்கான உலக அளவிலான தீர்மானமானத்தில் ”உலகில் எந்த ஒரு ஆண் (அல்லது) பெண் (அல்லது) குழந்தையும் தனது உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பேணிக்காப்பதற்கும் சத்துக்குறைபாடின்றி வாழ்வதற்கும் அவசியமான உணவினைப் பெற மறுக்க முடியாத உரிமையைக் கொண்டுள்ளனர்” எனக்கூறும் சொற்றொடரைப் பிரகடனப்படுத்தின.[1]

மாநாட்டு வெள்ளி நினைவு நாணயம்-முன் பகுதி
மாநாட்டு வெள்ளி நினைவு நாணயம்-பின் பகுதி

இந்த மாநாட்டின் மற்ற விளைவுகளை விட உலக உணவுக் கழகத்தில் இந்த மாநாடானது நடைபெற்றது என்பதும், தொடர்ந்து உலக உணவு மாநாடுகள் நடத்தப்பட இது காரணமாக அமைந்தது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. World Food Conference General Assembly (1974). "Universal Declaration on the Eradication of Hunger and Malnutrition". United Nations. Archived from the original on 8 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_உணவு_மாநாடு&oldid=3932720" இலிருந்து மீள்விக்கப்பட்டது