உணவுக்கான உரிமை
Jump to navigation
Jump to search
உணவுக்கான உரிமை என்பது மக்கள் உணவை உற்பத்திசெய்து, அல்லது கொள்வனவுசெய்து மானத்துடன் உண்பதற்கான உரிமை ஆகும். இது அனைத்துலகச் சட்டங்களில் உறுதிசெய்யப்பட்ட ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். இந்த உரிமையின் நீட்சியாக மக்கள் தம்மால் உச்சகட்டமாக முடிந்தளவு போதிய சத்தான உணவை உற்பத்தி செய்ய அல்லது கொளவனவுசெய்யத்தக்க சூழலை ஏதுவாக்குவது அரசுகளின் கடமை ஆகும்.[1] சிறப்பாக, இந்த உரிமை மக்கள் போரால் அல்லது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசுகள் உணவு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.[சான்று தேவை]