உள்ளடக்கத்துக்குச் செல்

உரூத்திரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரூத்திரைட்டு
Routhierite
உரூத்திரைட்டு படிகங்கள் (சிவப்பு).
பொதுவானாவை
வகைசல்போசால்ட்டு கனிமம்
வேதி வாய்பாடுTl(Cu,Ag)(Hg,Zn)2(As,Sb)2S6
இனங்காணல்
நிறம்ஊதா சிவப்பு
படிக இயல்புவடிவமற்ற மணிகள், படிக உருவமற்ற மணிகள் மற்றும் நரம்புகள்
படிக அமைப்புநாற்கோணம்
இரட்டைப் படிகமுறல்நுண்ணிய பல்செயற்கை இரட்டை
பிளப்பு2; இரண்டு செங்குத்து பிளவுகள்
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுஉலோகம்
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகாது
அடர்த்தி5.83
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
மேற்கோள்கள்[1][2][3]

உரூத்திரைட்டு (Routhierite) என்பது Tl(Cu,Ag)(Hg,Zn)2(As,Sb)2S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய தாலியம் சல்போசால்ட்டு கனிமமாகும்.

முதன்முதலில் 1974 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆல்ப்சு மலைத் தொடரிலுள்ள இயாசு ரூக்சு படிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[2] பிரெஞ்சு புவியியலாளர் பியர் உரூத்தியரை (1916-2008) நினைவு கூறும் வகையில் கனிமத்திற்கு உரூத்திரைட்டு எனப் பெயரிடப்பட்டது.[4] உருசியாவின் வடக்கு யூரல் மலைகள் மற்றும் கனடாவின் ஒன்டாரியோவின் தண்டர் பே மாவட்டம் ஆகிய இடங்களிலும் உரூத்திரைட்டு இருப்பது பதிவாகியுள்ளது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் உரூத்திரைட்டு கனிமத்தை Rtr[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 "Routhierite". mindat.org the mineral database.
  3. Routhierite Mineral Data
  4. Biography in french (archived)
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூத்திரைட்டு&oldid=4109232" இலிருந்து மீள்விக்கப்பட்டது