உருவாக்கமுடியாத பொருள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உருவாக்கமுடியாத பொருள் என்பது ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியற் கண்மாயம் ஆகும். அதாவது, இருபரிமாணத்தில் உள்ள பொருளை முப்பரிமாணத்தில் கற்பனையால் மட்டுமே பார்க்க முடியும். உண்மையில், இத்தகைய பொருட்களை உருவாக்குவது சாத்தியமில்லை.
இத்தகைய வரையப்பட்ட படங்களை சில நொடிகள் கூர்ந்து கவனித்தால், இதை உருவாக்குவது சாத்தியமில்லை எனத் தெரிந்துவிடும். சில படங்களில், கூர்ந்து நோக்கினாலும் இந்த உண்மைத் தன்மையை அறிய முடியாது. இது உளவியலாளர்களுக்கும், கணிதவியலாளர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் விருப்பமானது.
எடுத்துக்காட்டுகள்[தொகு]
- நெக்கர் கனசதுரம்
- முடிவில்லா படிக்கட்டுகள்
பெல்வேதேர் கண்டுபிடித்த வடிவம்
வரலாறு[தொகு]
சுவீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ரியூடெர்ஸ்வார்டு என்ற கலைஞர், இத்தகைய வடிவங்கள் பலவற்றை வரைந்தார். இவை கண்களை ஏமாற்றி, உண்மையான பொருட்களைப் போலவே தோன்றின. எனவே, இவரை, "உருவாக்க முடியாத வரைபடங்களின் தந்தை" எனப் போற்றினர். பின்னர், நெதர்லாந்து நாட்டு கலைஞரான எம்.சி. எஷெர் என்பவர் இதைப் போன்ற பல குழப்பத்தக்க, முரண்பாடு உடைய படங்களை வரைந்தார்.
மேலும் பார்க்கவும்[தொகு]
மூலங்கள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- இம்பாசிபிள் வேர்ல்டு (ஆங்கிலத்தில்)
- பொருளாக உருவாக்க முடியாத படங்கள் (ஆங்கிலத்தில்)