உருப்புடி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருப்புடி அம்மன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். பல்வேறு காரணங்களால் இறந்து போன கருவுற்ற பெண்களை உருப்புடி அம்மன் என்ற பெயரில் மக்கள் வழிபடுகின்றனர்.

  • மதானமேடு அணைக்கட்டு உடையாமல் இருக்க சூல் பெண் பலி சடங்கினால் இறந்து போன பெண்ணை கடலூர் மாவட்டம் கஞ்சமநாதபுரத்தில் மக்கள் உருப்புடி அம்மனாக வழிபடுகின்றனர்.[1]

தொன்மம்[தொகு]

உருப்புடி அம்மன் குறித்து இரு கதைகள் கூறப்படுகின்றன. கதை இரண்டிலும் கருவுற்ற பெண் பலியாக்கப்பட்டாள் என்பதை அறிய முடிகிறது. மக்கள் அத் துயரத்தினைத் தாங்காமல் இறந்த பெண்ணை அம்மனாக வழிபடுகின்றனர்.

தொண்டைமான் மகள்[தொகு]

தொண்டைமான் மன்னர் சமுட்டியான் என்பவரின் திறமையைக் கண்டு தளபதியாக நியமிக்கிறார். அவருக்கு தனது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அவர் கருவுற்ற சமயம் பெருமழை பெய்து, மதானமேடு அணை உடைந்து வெள்ளம் ஊருக்குள் வந்தது. அணையை சரிசெய்ய முயலும் போது "தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணியை பலிகொடுத்தால் அணை உடையாது பாதுகாப்பாக இருக்கும்" என அசிரிரி ஒலித்தது.

அதனால் மக்கள் தொண்டமான் தங்கள் குடும்ப பெண்களை பலி கொடுத்துவிடுவார் என பயந்து கருவுற்ற குடும்ப பெண்களை பக்கத்து பாளையங்களுக்கு அனுப்பினர். அந்நிலையில் தொண்டைமானின் மகள் நாட்டு மக்களின் நன்மைக்காக தன்னையே பலியாகக் கொடுக்க முன்வருகிறாள். குறுவாளால் தன்னையே பலி கொடுத்துக் கொண்டாள் தொண்டைமானின் மகள். அவளுடைய தியாகம் கண்டு மக்கள் அம்மனாக வழிபடுகின்றனர்.[2]

தொண்டைமான் மகள் பலி கொடுத்துக் கொண்ட இடம் 'உருவறுத்தான் கொல்லை' என்று அழைக்கப்படுகிறது.

பாளையக்காரர் மகள்[தொகு]

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆர்க்காடு நவாப்பிற்கு வரிகட்ட பாளையக்காரர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள். அதில் தென்குத்து பாளையக்காரராக வீரமுண்டனார் இருந்தார். அவர் வரி கட்ட மறுத்ததால், நவாப்பின் படையினர் தென்குத்து பாளையக்காரரை எதிர்த்துப் போர் செய்தனர்.

நவாப்பிற்குத் துணையாக வடகுத்து பாளையக்காரர்களும் இணைந்தனர். இதனால் தனியாக நின்று போராடிய வீரமுண்டனாரும், அவரது வாரிசுகளும் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களின் அரண்மனை சூறையாடப்பட்டு, மகளிர்கள் துன்புறுத்தப்பட்டனர். இதனைத் தடுக்க முனைந்த வீரமுடையார் கருவுற்ற பெண்ணை கொலை செய்தனர்.

அரசியல் காரணங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட பாளையக்கார மகளை உருப்படியம்மனாக வணங்குகிறனர்.[3]

கோயில்கள்[தொகு]


ஆதாரங்கள்[தொகு]

  1. விளைச்சலில் முதல்பங்கு அம்மனுக்கே!. 17 சூலை 2018. https://www.vikatan.com/spiritual/temples/142637-spiritual-story-of-sri-uruppidi-amman-temple. 
  2. "மண் மணக்கும் கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்! விகடன்".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "உருப்புடியம்மன் கதை-கிராமத்து சாமி". thenralkatru.forumta.net.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்புடி_அம்மன்&oldid=3764695" இலிருந்து மீள்விக்கப்பட்டது