உருடோல்ப் மின்கோவ்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருடோல்ப் மின்கோவ்சுகி
Rudolph Minkowski
Minkowski,Rudolph 1934 London.jpg
பிறப்புமே 28, 1895(1895-05-28)
சிடிராசுபவுர்கு, செருமானியப் பேரரசு
இறப்புசனவரி 4, 1976(1976-01-04) (அகவை 80)
பெர்க்கேலி, கலிபோர்னியா
தேசியம்செருமானியர்
துறைவானியல்
பணியிடங்கள்பலோமார் வான்காணகம்
அறியப்படுவதுமீவிண்மீன் வெடிப்பு
விருதுகள்புரூசு பதக்கம், 1961
கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 1 [1]
1620 ஜியோகிராபோசு செப்டம்பர் 14, 1951

உருடோல்ப் மின்கோவ்சுகி (Rudolph Minkowski) (பிறப்பில்: உருடோல்ப் இலியோ பெர்னார்டு மின்கோவ்சுகி (Rudolf Leo Bernhard Minkowski);மே 28, 1895 - ஜனவரி 4, 1976)ஒரு செருமானிய அமெரிக்க வானியலாளர் ஆவார்.[2]

இவர் மேரி யோகான்னா சீகலுக்கும் மருத்துவர் ஆசுகார் மின்கோவ்சுகி அவர்களுக்கும் பிறந்தார்.[3][4] இவரது மாமா எர்மன் மின்கோவ்சுகி ஒரு கணிதவியலாளரும் சூரிச்சில் அய்ன்சுட்டீனின் கணித ஆசிரியரும் ஆவார். உருடோல்ப் மீவிண்மீன் வெடிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இவர், வால்டேர் பாடே, அவர்களுடன் இணைந்து, அவற்றின் கதிர்நிரல் பான்மைகளை வைத்து, மீவிண்மீன் வெடிப்புகளை (வகை I, வகை II) என இரு வகுப்புகளாகப் பிரித்தார். இவரும் பாடேவுவும் பல்வேறு கதிர்வீச்சு வாயில்களுக்கான ஒளியியலான எதிரமைப்புகளைக் கண்டுபிடித்தனர்.

இவர் தேசியப் புவிப்பரப்பியல் கழகத்திலும் பலோமார் வான்காணக வானளக்கையிலும் முழு வட வான்கோள ஒளிப்பட அட்டவணை உருவாக்கத்திலும் தலைமை வகித்துள்ளார். இந்த அட்டவணை, 22° இறக்கக் கோணம் வரையிலும் 22 வானியல் தோற்றப் பொலிவு வரையிலும் அமைந்ததாகும்.[2]

இவர், ஆல்பர்ட் ஜார்ஜ் வில்சன் அவர்களுடன் இணைந்து புவியண்மை அப்பொல்லோ குறுங்கோளான 1620 ஜியோகிராபோசுவை 1951 இல் கண்டுபிடித்தார்.[5] இவர் கோளியல் வளிம ஒண்முகில் M2-9 ஐயும் கண்டுபிடித்தார். இவர் 1961 இல் புரூசு பதக்கத்தைப் பெற்றார்.[2] நிலாவின் மின்கோவ்சுகி குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நூல்தொகை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]