உள்ளடக்கத்துக்குச் செல்

உய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/ஹெட்டெராலோக்கா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
உய்யா
ஆண் பறவையும் பெண் பறவையும் மரக்கிளை ஒன்றில் இருப்பதைக் காட்டும் படம்
உய்யா இணைகள் (ஆண், பெண்ணுக்கு முன்னால் உள்ளது)

படம் ஜே. ஜி. கெயுல்மான்ஸ் ஆல் வரையப்பட்டது. டபிள்யூ. எல். புல்லரின் A History of the Birds of New Zealand (1888) என்ற நூலில் இருந்து

உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): ஹெட்டெராலோக்கா
இனம்:
ஹ. அக்கியூடிரோஸ்ட்ரிஸ்
இருசொற் பெயரீடு
ஹ அக்கியூடிரோஸ்ட்ரிஸ்
(கோல்ட், 1837)
நியூசிலாந்தின் வட தீவின் நிலப்படம்.
இளம் பச்சை: தொடக்க எல்லை
கடும் பச்சைக் கோடுகள்: 1840 எல்லை
சிவப்பு: 1907 இல் கடைசியாகக் கண்ட இடம்
மஞ்சள்: பின்னர் கண்ட இடங்கள் (உறுதிப்படுத்தாதது)
வேறு பெயர்கள்

நியோமோர்பா அக்கியூடிரோஸ்ட்ரிஸ் (பெண்)
நியோமோர்பா கிராசிரோஸ்ட்ரிஸ் (ஆண்)
ஹெட்டராலோக்கா கோல்டி

உய்யா (Huia) (Māori: [ˈhʉiˌa]; ஹெட்டராலோச்சா அக்குட்டிரொசுட்ரிசு) என்பது, நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்துபோன ஒரு பறவை. உறுதிப்படுத்திய வகையில் கடைசியாக இப்பறைவையைப் பார்த்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும். ஆனால், 1960கள் வரை இப்பறவையைப் பார்த்ததற்கு நம்பத்தக்க சான்றுகள் உள்ளன. இதன் அழிவுக்கு முதன்மையான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, மாதிரிகளை உருவாக்குவதற்கான உய்யாத் தோலுக்காகவும், தொப்பி அலங்காரத்துக்கான வால் இறகுகளுக்காகவும், இவை அளவு மீறி வேட்டையாடப்பட்டது. இரண்டாவது, வேளாண்மைக்காக ஐரோப்பியக் குடியேறிகளால் வட தீவுகளின் தாழ் நிலங்களில் இடம்பெற்ற காடளிப்பு. பெரும்பாலான காடுகள் மிகப் பழமையான, சூழலியல் அடிப்படையில் சிக்கலான, முதன்மைக் காடுகள். முன்னர் அவற்றில் வாழ்ந்த உய்யாக்கள் மீட்டுருவாக்கப்பட்ட இரண்டாம்நிலைக் காடுகளில் வாழ முடியவில்லை.

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே ஒரு அரிதான பறவையாக இருந்த இது, ருகைன், தராவுரா, ரிமுத்தாக்கா, வடக்குத் தீவின் தென்கிழக்கில் உள்ள கைமனாவா மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்பட்டன. உலகின் எந்தப் பறவை இனத்திலும் பார்க்க அலகின் வடிவத்தில் மிகத் தெளிவான பால்வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண் பறவையின் அலகு நீண்டு, மெலிந்து, கீழ்நோக்கி வளைந்து காணப்படும். ஆண் பறவையின் அலகு குட்டையாகவும், தடித்தும் காகத்தின் அலகுபோல் காணப்படும். ஆண் பறவைகள், 45 சமீ (18 அங்குலம்) நீளம்கொண்டவை. பெண் பறவைகள் 48 சமீ (19 அங்குலம்) நீளமானது. இவை தவிர, செம்மஞ்சள் தாடையும், பச்சை மினுக்கத்துடன் கூடிய கருநிறச் சிறகுகளுடனும் இரண்டு பாலினங்களும் ஒத்த தோற்றம் கொண்டவை. வால் இறகுகள் நுனிப் பகுதியில் வெண்ணிறப் பட்டையுடன் தனித்துவமாகக் காணப்படும்.

இப்பறவைகள் காட்டில் உயர்ந்த மலைப் பகுதிகளிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வாழ்ந்தன. இவை கோடை காலங்களில் உயரமான பகுதிகளிலும், குளிர் காலங்களில் தாழ்ந்த பகுதிகளிலும் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அனைத்துண்ணிகளான இவை வளர்ந்த பூச்சிகள், பூச்சிக் குடம்பிகள், சிலந்திகள் போன்றவற்றோடு, பழங்களையும், குறைந்த அலவிலான உள்நாட்டுத் தாவரங்களையும் உணவாகக் கொண்டன. ஆண், பெண் பறவைகள் தமது வேறுபாடான அலகுகளை வெவ்வேறு வகையில் பயன்படுத்தின. ஆண் பறவை தனது தடித்த அலகால் உக்கிய மரங்களைக் கொத்தி உடைத்தது. பெண் பறவையின் நீண்ட, மெலிந்த, வளைந்த அலகுகள் ஆழங்களுக்குச் சென்று இரையைப் பிடிக்க உதவியாக அமைந்தது. இவ்வினத்தின் கவர்ச்சியான ஈருருத் தோற்றம் காரணமாக, உயிரியல் நூல்களிலும், பறவையியல் நூல்களிலும் இவை அடிக்கடி குறிப்பிடப்பட்டாலும், இவற்றின் உயிரியல் தொடர்பாக அதிகமாக எதுவும் தெரியாது. இவை அழிந்துபோவதற்கு முன் இவைபற்றி அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

அலகின் வடிவம் காரணமாகவும், அழகாலும், மாவோரிப் பண்பாட்டிலும், வாய்மொழி மரபிலும் அதன் சிறப்பிடத்தினாலும் உய்யா, நியூசிலாந்தின் பெரிதும் அறியப்பட்ட அழிந்த பறவையாக உள்ளது. இப்பறவை மாவோரிகளால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதன் இறகுகளை அணியும் உரிமை உயர் தகுதி உள்ளவர்களுக்கே உரியது.

வகைப்பாடும் சொற்பிறப்பும்[தொகு]

இதன் பேரினப் பெயரான ஹெட்டெராலோக்கா (Heteralocha) என்பது, "ஹெட்டெரா" (வேறுபட்ட), "அலோக்கோஸ்" (மனைவி) என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானது.[2] இது இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகளின் அலகின் வடிவம் வேறுபட்டிருப்பதைக் குறிக்கிறது. சிறப்புப் பெயர் அக்கியூட்டிரோஸ்ட்ரிஸ் (acutirostris), கூரானது என்னும் பொருள்கொண்ட "அக்கியூட்டஸ்" (acutus), அலகு என்னும் பொருள் தரும் "ரொஸ்ட்ரம்" (rostrum) ஆகிய இலத்தீன் சொற்களில் இருந்து உருவானது. பெண் பறவையின் கூரிய அலகைக் குறித்தே இப்பெயர் ஏற்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heteralocha acutirostris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Cabanis 1850–1851:218, footnote
  3. Higgins et al. 2006:1014
  4. Szabo, Michael (October–December 1993). "Huia; The sacred Bird". New Zealand Geographic (20). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உய்யா&oldid=3928040" இலிருந்து மீள்விக்கப்பட்டது