உயிர்த்தெழும் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்த்தெழும் செடி

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : அனஸ்டாட்டிக்கா கைரோசன்டினா Anastatica hierochuntina

குடும்பம் : குருசிபெரே Cruciferae

இதரப் பெயர் : உயிர்த்தெழும் ஜெரிக்கோ Rose of Jericho

சிறப்பு பண்புகள்[தொகு]

இது ஒருபருவச் செடி, 12 செ.மீ. உயரம் வளரும். வெள்ளை நிற சிறிய

அனஸ்டாட்டிக்கா கைரோசன்டினா மலர்கள்

பூக்கள் விரைவில் வந்தவுடன் இலைகள் உதிரந்துவிடும். இதன் பிறகு இதனுடைய கிளைகள் சுருண்டு பந்து போன்று உருண்டையாகி கூடைபோல் தோன்றும். சுற்றியுள்ள கிளைகள் பாதுகாக்கின்றன. பாலைவனக் காற்றின் மூலம் இதன் வேர்கள் பிடுங்கப்பட்டால் இது உருண்டுகொண்டே செல்லும். இந்த பந்துபோன்ற அமைப்பு பார்ப்பதற்கு வெடிக்காத ரோஜா பூ போல் உள்ளது. மழை வந்தவுடன் இதன் கிளைகள் திரும்பவும் திறக்கின்றன. இதனால் இதன் உள்ளே உள்ள கனி வெடித்து விதைகள் வெளியே வருகின்றன. விதைகள் கிளையின் உள்ளேயே முளைக்கின்றன. இச்செடி இறப்பதில்லை. மீண்டும் உயிர் பெற்று விடுகிறது. இதில் ஒரே ஒரு இனம் மட்டும் உள்ளது.

உயிர் பெரும் செடி

காணப்படும் பகுதிகள்[தொகு]

இச்செடி அரேபியா, சிரியா, பாலஸ்தீனம், மற்றும் அல்ஜீரியா பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்த்தெழும்_செடி&oldid=3610595" இருந்து மீள்விக்கப்பட்டது