உயிரித் தரவு வரிக்குறியீடு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரித் தரவு வரிக்குறியீடு அமைப்பு (Barcode of Life Data System) என்பது டி. என். ஏ. வரிக்குறியீட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இணைய தளமாகும்.[1][2] இது கனடாவில் உள்ள பல்லுயிர் மரபியல் மையத்தில் உருவாக்கப்பட்ட மேகக்கணினி சார்ந்த தரவு சேமிப்பு மற்றும் பகுப்பாய்வு தளமாகும். இது நான்கு முக்கிய தொகுதிகள், ஒரு தரவு புறையம், ஒரு கல்வி புறையம், BIN களின் பதிவு (பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிற்றினங்கள்) மற்றும் டி. என். ஏ. வரிசைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான இணையவழி தளத்தை வழங்கும் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு பணியிடத்தைக் கொண்டுள்ளது.[2] 2005-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, தரவு அமைப்பு, சரிபார்ப்பு, காட்சிப்படுத்தல் மற்றும் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை வழங்க இத்தளம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-இல் தொடங்கப்பட்ட அமைப்பின் மிகச் சமீபத்திய பதிப்பு, பதிப்பு 4, தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வை ஆதரிக்கும் மேம்பாடுகளின் தொகுப்பைக் கொண்டுவருகிறது. ஆனால் தரவு பரவல், மேற்கோள் மற்றும் சிறுகுறிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் புதிய செயல்பாடுகளையும் உள்ளடக்கியது.[3] நவம்பர் 16, 2020க்கு முன், இத்தளம் ஏற்கனவே விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், புரோட்டிஸ்டுகள் (~8.9 மில்லியன் மாதிரிகள்) ஆகியவற்றை உள்ளடக்கிய 318,105 முறையாக விவரிக்கப்பட்ட உயிரினங்களுக்கான வரிக்குறியீட்டு வரிசைகளைக் கொண்டிருந்தது.[4]

டி. என். ஏ. வரிக்குறியீட்டில் ஆர்வமுள்ள எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் உயிரித் தரவு வரிக்குறியீடு அமைப்புச் சேவைகள் கட்டணமின்றிக் கிடைக்கும். சிறப்புச் சேவைகளை வழங்குவதன் மூலம், பன்னாட்டு நியூக்ளியோடைடு வரிசை தரவுத்தளங்களில் வரிக்குறியீட்டினைப் பெறுவதற்குத் தேவையான தரங்களைச் சந்திக்கும் பதிவுகளை வெளியிடுவதற்கு இது உதவுகிறது. இதன் இணைய அடிப்படையிலான விநியோகம் மற்றும் நெகிழ்வான தரவு பாதுகாப்பு மாதிரியின் காரணமாக, இது பரந்த ஆராய்ச்சி கூட்டணிகளை உள்ளடக்கிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது.[3]

உயிரித் தரவு வரிக்குறியீடு அமைப்பின் தரவு வெளியீடு முக்கியமாக 2010 முதல் 2015 வரை பன்னாட்டு உயிரி வரிக்குறியீடு கூட்டமைப்பால் செயல்படுத்தப்பட்ட வரிக்குறீயீடு 500கே[5] திட்டத்திலிருந்து உருவானது. இது 5,00,000 சிற்றினங்களைக் குறிக்கும் 5 மில்லியன் மாதிரிகளுக்கான டி. என். ஏ. வரிக்குறியீடு பதிவுகளின் தரவுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. அனைத்து மாதிரிகள் சேகரிப்பு, வரிசைகள் ஒதுக்கீடு, தகவல் வரிசையாக்கம் ஆகியவை உலகெங்கிலும் உள்ள நாடுகளைச் சேர்ந்த பெரிய அளவிலான அறிவியலாளர்கள், ஒத்துழைப்பார்கள் மற்றும் வசதிகளால் பங்களிக்கப்படுகின்றன. தரவுக் குவிப்பு டி. என். ஏ. வரிக்குறியீடு அடையாளத்தின் துல்லியத்தை அதிகரிக்கிறது..

மேற்கோள்கள்[தொகு]

  1. Ratnasingham, Sujeevan; Hebert, Paul D. N. (2013). "A DNA-Based Registry for All Animal Species: The Barcode Index Number (BIN) System". PLOS ONE 8 (7): e66213. doi:10.1371/journal.pone.0066213. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:23861743. Bibcode: 2013PLoSO...866213R. 
  2. 2.0 2.1 RATNASINGHAM, SUJEEVAN; HEBERT, PAUL D. N. (2007-01-24). "BARCODING: bold: The Barcode of Life Data System (http://www.barcodinglife.org)". Molecular Ecology Notes 7 (3): 355–364. doi:10.1111/j.1471-8286.2007.01678.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-8278. பப்மெட்:18784790. 
  3. 3.0 3.1 "BOLD Print Handbook for BOLD v4". பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  4. "Kingdoms of Life Being Barcoded | BOLDSYSTEMS". பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  5. "BARCODE 500K". Archived from the original on 2021-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.

வெளி இணைப்புகள்[தொகு]