உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்
![]() | |
---|---|
Slogan | "ஆப்கா அப்னா சாத்தி" |
Parent | உத்தரப் பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் |
நிறுவப்பட்டது | 15 மே 1947 |
தலைமையகம் | இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
Locale | உத்தரப் பிரதேசம் |
சேவையில் உள்ள பகுதிகள் | உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்டம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அரியாணா, மத்தியப் பிரதேசம், பீகார், தில்லி |
சேவை வகை | சாதாரணப் பேருந்துகளும், குளிரூட்டிய பேருந்துகளும் |
Fleet | 12429[1] |
இணையதளம் | UPSRTC |
உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேச அரசு இயக்கும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தக் கழகம் உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. கிட்டத்தட்ட 12429[1] பேருந்துகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 14 லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் இப்பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்தக் கழகத்தின் தலைமையகம் லக்னோவில் உள்ளது. 116 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



பேருந்துகள்[தொகு]
மக்களின் வசதிக்காக வெவ்வேறு வகை பேருந்துகளை உத்தரப் பிரதேச மாநில அரசு இயக்குகிறது.
- ஜனதா
மாவட்டத் தலைநகரங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கும் பிற ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும். குறைவான போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- மினி
மாவட்டத் தலைநகரங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கும் பிற ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும். இவை ஜனதா வகை பேருந்துகளைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியவை.
- சாதாரண வகை
இவை மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டணம் பெறப்படுகிறது.
- பவன் கோல்டு
இவை பாய்ண்டு-பாய்ண்டு வகை பேருந்துகளாகும். மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. சரியான நேரத்தில் புறப்படக் கூடிய பேருந்துகள்
- படுக்கை வசதி கொண்ட பேருந்துகள்
இவ்வகைப் பேருந்துகளில் நீண்ட தொலைவுகளுக்கு பயணிக்கலாம். இவற்றில் இரண்டடுக்குகள் உண்டு
- குளிரூட்டப்பட்ட பேருந்துகள்
இவை குளிரூட்டி வசதி கொண்டவை. இவ்வகை பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
- பிளாட்டினம் லைன்
வால்வோ வகை பேருந்துகள். தாராளமான இட வசதி கொண்ட இப்பேருந்துகள் மாவட்டத் தலைநகரங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
- ராயல் குரூசர்
இவ்வகைப் பேருந்துகள் உலகத் தரம் மிக்கவை. இவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன.
- நகரப் பேருந்துகள்
இவை லக்னோ, கான்பூர், ஆக்ரா, வாரணாசி, அலகாபாத், மேரட், பைசாபாத், நொய்டா, மதுரா ஆகிய நகரங்களில் இயங்குகின்றன. இவை ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.