உத்தம்பாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தம்பாய் படேல்
Uttambhai Patel
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980–1989
முன்னவர் நானுபாய் படேல்
பின்வந்தவர் அர்சூன்பாய் படேல்
பதவியில்
1991–1996
முன்னவர் அர்சூன்பாய் படேல்
பின்வந்தவர் மணிபாய் சௌத்ரி
தொகுதி வல்சாடு மக்களவை தொகுதி, குசராத்து
தனிநபர் தகவல்
பிறப்பு (1927-07-25)25 சூலை 1927
தம்லவ் கிராமம், வல்சாடு மாவட்டம், குசராத்து, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு 30 சனவரி 2018(2018-01-30) (அகவை 90)
தம்லவ் கிராமம்,
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

உத்தம்பாய் படேல் (Uttambhai Patel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தம்பாய் அர்ச்சிபாய் படேல் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1927 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். குசராத்து மாநிலத்தில் உள்ள வல்சாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்தார். முன்னதாக இவர் குசராத்து மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் [2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தம்பாய்_படேல்&oldid=3831641" இருந்து மீள்விக்கப்பட்டது