உத்தமபாளையம் காளத்திநாதர் கோயில்
Appearance
வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | உத்தமபாளையம் |
மாவட்டம்: | தேனி மாவட்டம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காளத்திநாதர் |
தாயார்: | ஞானம்பிகா |
உத்தமபாளையம் காளத்திநாதர் கோயில் என்பது தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் எனும் ஊரில் உள்ள சிவாலயமாகும். [1] இச்சிவாலயத்தின் மூலவர் காளத்திநாதர் எனவும், அம்பிகை ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு
[தொகு]இராணி மங்கம்மாளின் அரசவைக் கவிஞரான பிச்சை என்பவர் ஆந்திராவில் உள்ள காளத்திநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கமுடையவர். இவர் வயது முதிர்வின் காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியாமல் இருந்தார். அதனால் சிவபெருமானிடம் தன்நிலை குறித்து வேண்டிக்கொண்டார். அவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் காளத்திநாதராக காட்டூரில் இருப்பதைத் தெரிவித்தார். அங்கு சென்ற பிச்சை அங்கிருந்த சிவலிங்கத்தினை எடுத்துவரும் வழியில் மாட்டுவண்டியின் அச்சு முறிய அவ்விடத்திலேயே காளத்திநாதர் ஆலயம் அமைந்தது. அந்த ஊர் உத்தமபாளையமாகும். [1]