உணாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூசு கவிகை நீக்கப்பட்ட தானுந்து வகை குறும் உணாத்தி

உணாத்தி (relay) என்பது மின்சாரத்தினால் இயக்கப்படும் நிலைமாற்றி ஆகும். பெரும்பாலான உணாத்திகள் நிலைமாற்றி அமைப்பை இயக்கிட மின்காந்தங்களை பயன்படுத்துகின்றன. இருப்பினும் பிற இயக்க கோட்பாடுகளைப் பயன்படுத்தும் உணாத்திகளும் உள்ளன. எங்கேனும் குறைந்த ஆற்றல் குறிப்பலையால் (கட்டுப்பாடு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுகளுக்கிடையே முழுமையான மின்சாரத் தனிமைப்படுத்தலுடன்) ஒரு சுற்றை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதோ அல்லது ஒரு குறிப்பலை பல சுற்றுக்களை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதோ அங்கெல்லாம் உணாத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. தொலைதூர தந்தி சுற்றுகளில் முதலில் உணாத்திகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு சுற்றிலிருந்து வரும் செய்தியை மற்றொரு சுற்றுக்கு மீள்பரப்பு செய்ய இவை பயன்படுத்தப்பட்டன. தொலைபேசி இணைப்பகங்களில் உணாத்திகள் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. துவக்க கால கணினிகளும் ஏரணசெ செயற்பாடுகளுக்காக உணாத்திகளை பயன்படுத்தி வந்தன.

வலிய ஆற்றல்கொண்டு நேரடியாக மின் இயக்கி போன்றவற்றை கையாளக்கூடிய உணாத்திகள் தொடுவான் எனப்படுகின்றன. திண்மநிலை உணாத்திகள் மின்சார சுற்றுக்களை எந்தவொரு இயங்கு பாகங்களும் இன்றி இயக்குகின்றன.

வரலாறு[தொகு]

1835ஆம் ஆண்டில் அமெரிக்க அறிவியலாளர் ஜோசப் என்றி உணாத்தியை கண்டுபிடித்தார். 1831ஆம் ஆண்டில் உருவான மின்தந்தி அமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் இதனைக் கண்டறிந்தார்.[1][2][3][4]

இதனை ஆங்கில கண்டுபிடிப்பாளர் எட்வர்டு டேவி கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.[5]

இன்று நாம் காணும் உணாத்தியை ஒத்த ஒரு கருவி சாமுவேல் மோர்சின் 1840 தந்தி காப்புரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.[6]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உணாத்தி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணாத்தி&oldid=3235273" இருந்து மீள்விக்கப்பட்டது