உடான் பல்லுயிர்மப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடான் பல்லுயிர்மப் பூங்கா (Udaan Biodiversity Park) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவச் செடிகளால் ஆன ஒரு பூங்கா. இது புனேயின் விமான் நகர் என்னும் இடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ குணமுடைய மூலிகைகளும் மருந்துச் செடிகளும் வளர்க்கப்படுகின்றன.

இப்பூங்கா பட்டாம்பூச்சியின் சிறகுகளின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பலவிதமான காட்டுச் செடிகளும், 147 வகையான செடிகளும் இங்குள்ளன. இப்பூங்காவில் கண் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் பிரையில் மொழியில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பண்டமாற்று முறையில் இங்குவரும் மக்கள் ஒரு செடியைப் பெற்றுக் கொண்டு மாற்றுச் செடியை தானமாக கொடுக்கின்றனர்.

இப்பூங்காவை உருவாக்கி, நிருவகித்து வருபவர்கள் சென்சார் அறக்கட்டளை (Zensar Foundations) என்ற நிறுவனம் ஆகும்.

உசாத்துணைகள்[தொகு]

  • மஞ்சரி மலர், Source with courtesy, Pune News line தமிழில் கிரிஜா நாராயணன்.

வெளி இணைப்புகள்[தொகு]