உடற்குழி
உடற்குழி Coelom | |
---|---|
![]() பல்சுணைப்புழுவின் குறுக்குவெட்டு தோற்றம். புழுவின் உடல் குழி மையத்தில் உணவுக்குழலின் குருட்டுமடியினைச் சுற்றி உள்ளது. | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
கிரேக்கம் | koilōma |
உடற்கூற்றியல் |
உடற்குழி (Coelom)[1] என்பது பெரும்பாலான விலங்குகளி ன் உடலில் காணப்படும் முக்கியக் குழி ஆகும். இது செரிமானப் பாதை மற்றும் பிற உறுப்புகளைச் சுற்றி உடலின் உள்ளே காணப்படுகிறது. சில விலங்குகளில், இது மீசோதெலியத்துடன் வரிசையாக இருக்கும். மெல்லுடலிகள் போன்ற பிற விலங்குகளில், இது வேறுபடுத்தப்படாமல் உள்ளது. கடந்த காலத்தில், மற்றும் நடைமுறை நோக்கங்களுக்காக, உடற்குழியின் பண்புகள் அடிப்படையில் விலங்குகள் இரு தொகுதி குழுக்களாக வகைப்படுத்த பயன்படுத்தப்பட்டன.
சொற்பிறப்பியல்[தொகு]
சீலம் என்ற ஆங்கிலச் சொல் பண்டைய கிரேக்க வார்த்தையான κοιλία (கொய்லியா) என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் 'குழி' என்பதாகும்.[2][3][4]
விலங்குகள் வகைப்பாடு[தொகு]
உயிரிகள் உடற்குழி அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
- உடற்குழி உடையவை
- உடற்குழியற்றவை
- பொய்யான உடற்குழியுடையவை
பெரும்பாலான விலங்குகளில் உடற்குழி முதன்மையானதாக அமைந்துள்ளது. உடலின் உட்புறம் உடற்குழி, செரிமான மண்டலம் மற்றும் பிற உறுப்புகள் சுற்றி அமைந்துள்ளது. இவை இடைபடை எப்பிதீலியம் செல்களால் இணைக்கப்பட்டுள்ளது. மெல்லுடலிகளில் மட்டும் உடல் சுவர் வேறுபடுத்த இயலாது.
அமைப்பு[தொகு]
கரு முட்டையின் மையப்பகுதியில் ஓர் குறிப்பிட்ட இடத்திலுள்ள கருபடல செல்கள் நீட்சியடைந்து ஓர் சீசா அமைப்பினைப் பெறுகின்றன. இச்செல்கள் கருக்கோலத்திலுள் நகரத் தொடங்குகின்றன. இதனால் மேல்புறத்திர் ஓர் சிறிய பள்ளம் தோன்றுகிறது. இப்பள்ளம் கருக்கோளக்குழியுள் பரவி ஆர் கென்டிராள் என்னும் புதிய உட்குழியினைத் தோற்றுவிக்கிறது. கருகோளத்தின் பரப்பில் உள்ள உறுப்பாக்கச் செல்கள் கருக்கோளத் துணையின் வசதியாக உள் நுழையத் துவங்குகின்றன. இவ்வேளையில் இடைப்படை, அகப்படைச் செல்கள் தங்களுக்குரிய நிலைகளை வந்தடைந்து விடுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Celom". Merriam-Webster Dictionary.
- ↑ Bailly, Anatole (1981-01-01). Abrégé du dictionnaire grec français. Paris: Hachette. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2010035283. இணையக் கணினி நூலக மையம்:461974285.
- ↑ Bailly, Anatole. "Greek-french dictionary online". www.tabularium.be. 2018-01-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑
"Coelom and Serous Membranes". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press.
மேலும் காண்க[தொகு]
- Wikisource-logo.svg Chisholm, Hugh, ed. (1911). "Coelom and Serous Membranes". Encyclopædia Britannica. 6 (11th ed.). Cambridge University Press. p. 642.
- http://encyclopedia2.thefreedictionary.com/Coelom
- Ruppert, Edward E.; Fox, Richard, S.; Barnes, Robert D. (2004). Invertebrate Zoology, 7th edition. Cengage Learning. p. 205. ISBN 978-81-315-0104-7.
- Dorit, R. L.; Walker, W. F.; Barnes, R. D. (1991). Zoology. Saunders College Publishing. p. 190. ISBN 978-0-03-030504-7.
- Nielsen, C. (2010). The “new phylogeny”. What is new about it?. Palaeodiversity, 3, 149–150, [1].
- "Animals III — Pseudocoelomates and Protostome Coelomates". Archived from the original on 2009-04-06.[unreliable source?]
- R.C.Brusca, G.J.Brusca. Invertebrates. Sinauer Associates, Sunderland Mass 2003 (2nd ed.), p. 47, ISBN 0-87893-097-3.
- "Coeloms and Pseudocoeloms". earthlife.net. Retrieved August 30, 2011.
- Evers, Christine A., Lisa Starr. Biology:Concepts and Applications. 6th ed. United States:Thomson, 2006. ISBN 0-534-46224-3.
- R.C.Brusca, G.J.Brusca 2003, p. 379.