கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈ. ஐ. லெதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை (East India Leather) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மற்றும் திண்டுக்கலில் அமைந்துள்ள ஒரு தோல் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இங்கு குரோம் என்ற வேதிப்பொருளுக்குப் பதிலாக பாரம்பரிய முறையில் தாவரப் பொருள்களைப் பயன்படுத்தி தோல் பதனிடப்படுகிறது.[1][2][3]

வரலாறு[தொகு]

பிரித்தானிய ஆட்சி காலமாக இருந்த 1856 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை இப்பகுதியில் தொடங்கப்பட்டது. கிழக்கு இந்திய கம்பெனிக்குப் பின்னர் எலக்ட்ரான் அயனியாக்கத் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தோல் பதனிடும் நிறுவனம் இது மட்டுமேயாகும்.

புவிசார் குறியீடு[தொகு]

தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் புவிசார் குறியீட்டுத் தகுதி 2008 ஆம் ஆண்டு கிழக்கிந்திய தோல் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.[4][5]

மேற்கோள்காள்[தொகு]

  1. "EI leather approved, registered as exclusive geographical product". தி இந்து. 2008-07-12. Archived from the original on 2008-07-15.
  2. Joseph Vackayil. "Need to explore niche markets for EI leather". The Financial Express.
  3. "TN tanners demand abolition of duty on leather exports". Archived from the original on 16 February 2013.
  4. BS Reporter (24 July 2008). "East India leather gets GI tag".
  5. "Only 9 products have got GI status so far". The Hindu Business Line.