உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழத்து இரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்து இரத்தினம் ஈழத்து மெல்லிசை, மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.

இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட 1970-71 காலப்பகுதியில் ஈழத்து இரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. இலங்கையில் உருவான அனேகமான தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய ஈழத்து இரத்தினம் தென்னிந்தியாவின் தமிழ்த் திரைப்படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறார். ஜெமினி கணேசன்,சரோஜாதேவி நடித்த எல்லாரும் இந்நாட்டு மன்னர் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் பாடிய தலைப்பு பாடலான எல்லாரும் இந்நாட்டு மன்னரடா பாடலை இவர்தான் எழுதினார். திரைப்படத்தின் பாடலாசிரியர் பெயர்ப் பட்டியலில் இவரது பெயர் எஸ். இரத்தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுதிய இலங்கைத் திரைப்படப்பாடல்காள்[தொகு]

திரைக்கதை[தொகு]

குத்துவிளக்கு திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியதோடு சகல பாடல்களையும் ஈழத்து இரத்தினம் எழுதியிருந்தார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழத்து_இரத்தினம்&oldid=3785062" இலிருந்து மீள்விக்கப்பட்டது