உள்ளடக்கத்துக்குச் செல்

ஈலியம் முப்படி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈலியம் முப்படி (Helium trimer) மூன்று ஈலியம் அணுக்கள் கொண்ட ஒரு பலவீனமான பிணைப்பு மூலக்கூறு ஆகும். வான் டெர் வால்சு விசை இந்த மூன்று அணுக்களையும் இணைத்துள்ளது. மூன்று ஈலியம் அணுக்கள் இணைந்து உருவாகும் ஈலியம் முப்படி இரண்டு அணுக்கள் இணைந்து உருவாகும் ஈலியம் இருபடியைக்காட்டிலும் நிலைப்புத்தன்மை மிகுந்ததாக உள்ளது. மேலும் ஈலியம் -4 அணுக்களின் மூன்று அணு கலவையானது எஃபிமோவ் விளைவு என்ற குவாண்டம் இயங்கியல் விளைவைக் கொண்டுள்ளது [1][2]. ஈலியம் -3, ஓர் முப்படியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஈலியம் -3 யைக் கொண்டுள்ள அடிப்படை இருபடிகள் முற்றிலும் நிலையற்றவையாகும் [3].

குளிர்ந்த ஈலியம் வாயுவை குழாய் முனை ஒன்றிலிருந்து ஒரு வெற்றிட அறைக்குள் விரிவடையச் செய்வதன் மூலம் ஈலியம் முப்படி மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றன. இதே முறையில் ஈலியம் இருபடியும் பிற ஈலியம் மூலக்கூறுத் தொகுதிகளும் உருவாக்கப்படுகின்றன. விளிம்பு விளைவு கீற்றணியின் மீது பருப்பொருள் அலையின் செயல்பாடு இம்மூலக்கூற்றின் இருப்பை நிருபித்தது [4].பயன்படுத்தப்படும் கீற்றணிகளில் மூலக்கூறுகள் புகுந்து செல்ல பட்டைகளுக்கு இடையே காலியிடம் இருக்க வேண்டும், கண்ணாடி ஈலியத்தை தடுத்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. கூலும் வெடிப்பு படமாக்கல் மூலம் ஈலியம் முப்படி மூலக்கூறுகளின் பண்புகளை கண்டறியமுடியும் [4]. இம்முறையில் சீரொளியானது ஒரே நேரத்தில் மூன்று அணுக்களையும் அயனியாக்குகிறது. இம்மூன்று அயனிகளும் தனித்தனியாகப் பிரிந்து நகர்கின்றன. பின்னர் கண்டறியப்படுகின்றன.

ஈலியம் முப்படி மூலக்கூறுகள் 100 Å அளவுக்கு பெரிய மூலக்கூறுகளாகும். இவை ஈலியம் இருபடி மூலக்கூறுகளைக்காட்டிலும் பெரியவையாகும். எதிர்பார்த்தபடி அணுக்கள் சமச்சீர் முக்கோணத்தில் ஒழுங்கமைக்கப்படாமல் சீரற்ற வடிவ முக்கோணங்களை உருவாக்குகின்றன [5].

ஓர் ஈலியம் அணு அயனியாக்கம் மற்றும் கிளச்சியடையும்போது அணுக்களிடையே கூலும்பிக் சிதைவு ஏற்படலாம். இதனால் பிரிக்கப்பட்டு தனித்தனியாக இருந்தாலும் முப்படியின் மற்ற அணுக்களுக்கு ஆற்றல் மாற்றப்படலாம். அணுக்கள் அருகருகே இருக்கும்போது இம்மாற்றம் நிகழும் வாய்ப்பு அதிகமாகும். அணுக்களுக்கிடையிலான இடைவெளி 3.3 முதல் 12 Å அளவு வரைக்கும் மாறுபடுகிறது 4He3 அணுத்திட்ட்த்தின் சராசரி மூலகூறிடை கூலும் சிதைவு இடைவெளி 10.4 Å இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. 3He4He2 அணுத்திட்டத்தில் இந்த இடைவெளி 20.5 Å அளவுக்கு பெரியதாகும்[6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kolganova, Elena A. (26 Nov 2010). "Helium Trimer in the Framework of Faddeev Approach". Physics of Particles and Nuclei 41 (7): 1108–1110. doi:10.1134/S1063779610070282. Bibcode: 2010PPN....41.1108K. https://sts-karelia09.jinr.ru/publish/Pepan/2010-v41/v-41-7/27-kol.pdf. பார்த்த நாள்: 28 February 2015. 
  2. Kolganova, E. A.; Motovilov, A. K.; Sandhas, W. (4 May 2011). "The 4He Trimer as an Efimov System". Few-Body Systems 51 (2–4): 249–257. doi:10.1007/s00601-011-0233-x. Bibcode: 2011FBS....51..249K. 
  3. Al Taisan, Nada Ahmed (May 2013). Spectroscopic Detection of the Lithium Helium (LiHe) van der Waals Molecule (PDF) (Thesis). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-12-14.
  4. 4.0 4.1 Kunitski, M.; Zeller, S.; Voigtsberger, J.; Kalinin, A.; Schmidt, L. P. H.; Schoffler, M.; Czasch, A.; Schollkopf, W. et al. (30 April 2015). "Observation of the Efimov state of the helium trimer". Science 348 (6234): 551–555. doi:10.1126/science.aaa5601. பப்மெட்:25931554. Bibcode: 2015Sci...348..551K. 
  5. Goethe University Frankfurt (30 April 2015). "Efimov state in the helium trimer observed". பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
  6. Kolorenč, Přemysl; Sisourat, Nicolas (14 December 2015). "Interatomic Coulombic decay widths of helium trimer: Ab initio calculations". The Journal of Chemical Physics 143 (22): 224310. doi:10.1063/1.4936897. பப்மெட்:26671378. Bibcode: 2015JChPh.143v4310K. http://scitation.aip.org/content/aip/journal/jcp/143/22/10.1063/1.4936897. 

மேலும் படிக்க

[தொகு]
  • Suno, Hiroya (14 January 2016). "Geometrical structure of helium triatomic systems: comparison with the neon trimer". Journal of Physics B: Atomic, Molecular and Optical Physics 49 (1): 014003. doi:10.1088/0953-4075/49/1/014003. Bibcode: 2016JPhB...49a4003S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈலியம்_முப்படி&oldid=3235115" இலிருந்து மீள்விக்கப்பட்டது