ஈரானில் நீர்ப்பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈரானில் நீர்ப்பாசனம் (Irrigation in Iran) 89,930 கிலோமீட்டர்2 பரப்பளவுப் பகுதிக்கு பாசன வசதியை அளிக்கிறது. நீர்ப்பாசனப் பரப்பளவின் அடிப்படையில் ஈரான் ஐந்தாவது இடம் பிடிக்கும் நாடாகக் கருதப்படுகிறது[1].

அலை நீர்ப்பாசனம்[தொகு]

படம். 1: அபதான் தீவின் ஆறுகளையும் பேரீச்சம் பழம் பயிரிடுதலையும் காட்டுகிறது.

குசெசுதான் மாகாணத்திலுள்ள அபதான் தீவு (படம் 1) அர்வாந்து, பாக்மான்சிர் என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. அர்வாந்து ஆறு (அரபி: Shatt al-Arab) ஈரான், ஈராக் நாடுகளுக்கு இடையில் ஓர் எல்லையாக உருவாகி இயூபிரடீசு, டைகிரிசு ஆறுகளிலிருந்து தண்ணிரைப் பெற்றுக் கொள்கிறது. ஈரான் – ஈராக் போரின் போது ஏராளமான பேரீச்ச மரங்கள் அழிக்கப்பட்டன என்றாலும் அபதான் தீவில் பரவலாக பேரீச்சம் பழத்தோட்டங்கள் செழித்து உள்ளன. பாலைவன வகை காலநிலை நிலவும் அபதான் தீவின் இச்செழிப்பிற்கு அலை நீர்ப்பாசனமே காரணமாகும்.

பேரீச்சம் மரவளையங்கள்[தொகு]

அபதான் தீவில் தொடங்கும் பேரீச்சமர வளையங்கள் தென்கிழக்கில் அர்வாந்து ஆற்றின் கரை நெடுகிலும் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டும், உட்புறச் சாலைகளால் சூழப்பட்டும் காணப்படுகின்றன. பேரீச்சமர வளையங்கள் 2 கிலோமீட்டர் முதல் ஆறு கிலோமீட்டர் வரை அகலத்தில் வேறுபடுகின்றன. சராசரியாக இந்த அகலப் பரப்பு நான்கு கிலோமீட்டர் இருப்பதாகக் கொள்ளலாம். ஆற்று வளைவுகளில் உள்ள குழிந்த பகுதிகளில் இவ்வளையத்தின் அகலம் பெரியதாகவும், குவிந்த பகுதிகளில் இவ்வளையங்களின் அகலம் சிறியதாகவும் உள்ளன. மேலும், குவிந்த பகுதிகளில் அதிக அணைக்கரைகளும் நில அமைவுகளும் காணப்படுகின்றன. அபதான் தீவில், சுமார் 16,000 எக்டேர் பரப்பளவில் பேரீச்ச மரவளையங்கள் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. 6x6 மீட்டர் இடப்பரப்பில் ஒவ்வொரு மரமும் ஆரோக்கியமாக வளர்கின்றன. ஒரு எக்டேருக்கு தோராயமாக 300 பேரீச்ச மரங்கள் வரை காணப்படுகின்றன. பேரீச்சம் மரம் ஒன்று 200 கிலோகிராம் பழங்களை உற்பத்தி செய்கிறது. ஒரு எக்டேர் பரப்பில் சுமார் 60 டன் பழங்கள் இங்கு உற்பத்தியாகின்றன.

ஓதக் கால்வாய்கள்[தொகு]

ஓதக் கால்வாய்கள் திட்டத்தின் வரைபடத்தில் (படம் 2) காட்டப்பட்டுள்ளது[2]. இட அமைப்பைச் சார்ந்து அவற்றின் நீளம் 2 முதல் 6 கிலோ மீட்டர் வரை மாறுபட்டும் 50 முதல் 60 மீட்டர் இடைவெளியுடனும் அவை அமைந்துள்ளன.

ஆற்றங்கரை நெடுகிலும் ஓதக்கால்வாய்கள் அணைக்கரை மண்ணை வெட்டி வழி் உண்டாக்கி உதவி செய்கின்றன.(படம்:3) வடிநிலத்தின் மண் எங்கிருந்து வண்டலும் சேறும் கலந்த சதுப்புநிலமாகத் தொடங்குகிறதோ அங்கு அவை இப்பணியை நிறுத்திக் கொள்கின்றன.

ஓதக் கல்வாய்களுக்கு இடையே கூடுதலாக பக்கவாட்டில் 50, 60 மீட்டர் இடைவெளியில் பள்ளங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டு பாசன நீரின் விநியோகம் மேலும் எளிமையாக்கப்படுகிறது.பக்கவாட்டுப் பள்ளங்களிலிருந்து 10 முதல் 12 மீட்டர் தொலைவில் வயல் வாய்க்கால்கள் தோன்றுகின்றன. இவ்வாய்க்கால்கள் நெடுகிலும் பேரீச்சை மரங்கள் நடப்படுகின்றன(படம் 4)

மண்ணின் பண்புகள்[தொகு]

கடல் அலை தடுப்பு மண்ணின் குறிப்பிடத்தக்க சில பண்புகள் (படம் 5) இல் காட்டப்பட்டுள்ளது. நன்கு பண்படுத்தப்பட்ட மண் 1 மீட்டருக்கும் அதிகமான அளவில் தடிமனைப் பெற்றுள்ளது. இதன் வழியாக தண்ணீர் உள்ளேயும் வெளியேயும் எளிமையாக நகரமுடியும்.

ஓதங்கள்[தொகு]

ஓத நகர்வுகள் 2 மீ சராசரியைக் கொண்டுள்ளன, பள்ளங்கள் பொங்கித்தாழும் ஏற்ற இறக்கங்களின் ஒப்புருவாக்கச் சராசரியாக எண்ணிக்கை படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது.கடலில் இருந்து பல்வேறு தொலைவுகளில் ஒரு நதி வெளியேற்றுவதற்கான ஒப்புருவாக்கங்கள் டப்ளோ மாதிரி வடிவில் உருவாகின்றன[3].

படக்காட்சியகம்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. CIA World Fact Book
  2. Consultancy report on the Abadan project. Abvarzan Co., Tehran, Iran, 12 September 2004. Download from web page : [1] , under nr. 1, or directly as PDF : [2]
  3. Duflow model http://www.mx-groep.nl/duflow/model