ஈரயோடின் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரயோடின் ஆக்சைடு
Diiodine oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரயோடின் ஆக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
அயோடோ ஐப்போடைட்டு[1]
வேறு பெயர்கள்
அயோடின் ஐப்போ அயோடைடு, ஈரயோடோ ஆக்சிடேன், ஈரயோடின் ஓராக்சைடு, ஐப்போ அயோடசு நீரிலி, அயோடோ ஐப்போ அயோடைட்டு
இனங்காட்டிகள்
17739-47-8
InChI
  • InChI=1S/I2O/c1-3-2
    Key: VSHDHKDWBUMJIJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14513630
SMILES
  • O(I)I
பண்புகள்
I2O
வாய்ப்பாட்டு எடை 269.808 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈரயோடின் ஆக்சைடு (Diiodine oxide) என்பது I2O என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடினுடைய ஆக்சைடான இது ஐப்போ அயோடசு அமிலத்தின் அமில நீரிலிக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மத்தை தனித்துப் பிரிப்பது கடினமாகும்.[2]

தயாரிப்பு[தொகு]

96% கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் அயோடேட்டுடன் அயோடினை சேர்த்து வினைபுரியச் செய்து பின்னர் விளைபொருளான குளோரினேற்றம் பெற்ற கரைப்பானில் கரைத்தால் ஈரயோடின் ஆக்சைடு உருவாகும்.[2]

வினைகள்[தொகு]

ஈரயோடின் ஆக்சைடு நீருடன் வினைபுரிந்து ஐப்போ அயோடசு அமிலத்தைக் கொடுக்கும். I2O + H2O → 2 HIO

மேற்கோள்கள்[தொகு]

  1. "Epoxy-iodide".
  2. 2.0 2.1 Furrow, Stanley D.; Schmitz, Guy E. (2019-09-01). "I2O in solution and volatility" (in en). Chemical Physics Letters 730: 186–190. doi:10.1016/j.cplett.2019.05.052. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2614. Bibcode: 2019CPL...730..186F. http://www.sciencedirect.com/science/article/pii/S0009261419304579. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரயோடின்_ஆக்சைடு&oldid=3869634" இலிருந்து மீள்விக்கப்பட்டது