ஈப்போ ஒயிட் காபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈப்போ ஒயிட் காபி
Ipoh White Coffee
白咖啡
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஓல்ட் டவுன் கோபிதியாம் கடையில் ஒரு கோப்பை ஈப்போ வெள்ளை காபி
தொடங்கிய இடம்ஈப்போ, மலேசியா
பகுதிதென்கிழக்காசியா
தொடர்புடைய சமையல் வகைகள்மலேசிய உணவுகள்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக அல்லது குளிராக
முக்கிய சேர்பொருட்கள்காபி தூள், அடர்பால்

ஈப்போ ஒயிட் காபி அல்லது ஈப்போ வெள்ளை காபி (ஆங்கிலம்: Ipoh White Coffee மலாய்: Kopi Putih Ipoh சீனம்: 白咖啡) என்பது மலேசியா, பேராக், ஈப்போவில் தோன்றிய ஒரு பிரபலமான காபி பானமாகும்.

காபி கொட்டைகள் செம்பனை எண்ணெயில் (Palm Oil Margarine) வறுக்கப் படுகின்றன; அதன் விளைவாக வரும் கறுமைக் காபி அடர்பாலுடன் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது.[1]

வெள்ளை காபி (White Coffee) என்ற சொல் அதன் சீனப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பில் இருந்து உருவானது. 19-ஆம் நூற்றாண்டில், மலாயாவின் உள்ளூர் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்ய வந்த சீனக் குடியேறிகளால் இந்த ஈப்போ வெள்ளை காபி அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. Simon Richmond (2007). Malaysia, Singapore & Brunei. Ediz. Inglese. Lonely Planet. பக். 148–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74059-708-1. https://books.google.com/books?id=BDV_6MtZnkYC&pg=PA148. 
  2. Avran, Dave (September 10, 2019). "Intriguing and interesting inception of Ipoh White Coffee". Free Malaysia Today News. https://www.freemalaysiatoday.com/category/leisure/2019/09/10/intriguing-and-interesting-inception-of-ipoh-white-coffee/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈப்போ_ஒயிட்_காபி&oldid=3666036" இலிருந்து மீள்விக்கப்பட்டது