இ.கோ. சாக்கோ
இல்லிபரம்பில் கோரா சாக்கோ (Illiparambil Corah Chacko) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார். சிறந்த புவியியலாளர், தத்துவவியலாளர், இலக்கண அறிஞர் என்ற வேறு முகங்களும் இவருக்கு உண்டு. 1875 முதல் 1966 ஆம் ஆண்டு கால பகுதியில் இவர் வாழ்ந்தார்.[1]
கேரளாவின் ஆலப்புழா நகரம் குடநாடு தாலுக்காவிலுள்ள புலிங்குன்று கிராமத்தில் இவர் பிறந்தார். எர்ணாகுளத்தில் உள்ள மகாராசா கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சாக்கோ இலண்டன் சென்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் இம்பீரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். இராயல் சுரங்கம் பள்ளியின் உறுப்பினராகவும் திருவாங்கூர் மாநிலத்தின் மாநில புவியியலாளராகவும், தொழில்துறை இயக்குநராகவும் இருந்தார்.
இவர் ஆங்கிலம், மலையாளம் மற்றும் சமசுகிருதத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக இருந்தார். 1956 ஆம் ஆண்டு இவ எழுதிய 'பானநீய பிரத்யோதிதம்' என்ற படைப்பிற்காக இவருக்கு கேந்திர சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரது பெயரில் அகாதமி ஒரு கொடை விருதையும் அளிக்கிறது.[2] சாக்கோவின் மற்ற படைப்புகளில் சமசுகிருத கவிதையான 'கிறிசுத்து சகாசுரநாமம்' (கிறிசுதுவின் ஆயிரம் பெயர்கள்) என்ற கவிதையும் அடங்கும். இவருக்கு போப் 'செவலியர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Illiparambil Corah Chacko, B. A., B. Sc. [ഇല്ലിപ്പറമ്പില് കോര ചാക്കോ, ബി. എ., ബി. എസ്. സി. / इल्लिप्परंपिल् कोर चाक्को, बि. ए., बि. एस्. सि.". D. C. Kandathil, NYU இம் மூலத்தில் இருந்து 6 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120606161624/http://cs.nyu.edu/kandathi/i_c_chacko.html. பார்த்த நாள்: 2007-12-23.
- ↑ I_C_Chacko Endowment Awards
புற இணைப்புகள்[தொகு]
- "`I. C. Chacko, Illiparambil'". D. C. Kandathil, NYU இம் மூலத்தில் இருந்து 6 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120606161624/http://cs.nyu.edu/kandathi/i_c_chacko.html. பார்த்த நாள்: 2007-12-23.