இஸ்ரவேலின் நாதாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
        நாதாபு வட இஸ்ரவேல் இராஜ்ஜியத்தின் இரண்டாவது அரசன். இவர் எரொபவாமின் மகன் மற்றும் இராஜ்ஜியத்தின் வாரிசும் ஆவார்.

ஆட்சி

   யூதாவின் அரசரான ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், எரொபவாவின் மகன் நாதாபு இஸ்ரேலின் அரசரானார் .வில்லியம் F. ஆல்பிரைட் என்பவர் கி.மு 901 _ 900 வரை இவர் ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறார்.
    நாதாபும், இஸ்ரேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டியிருக்கையில் அவனுடைய தளபதிகளுள் ஒருவனான பாசா அவனுக்கு எதிராக கலகம் பண்ணி அவணைக் கொன்று போட்டான் .பின் அவனே இஸ்ரவேலுக்கு இராஜாவானான். நா தாப்பைக் கொன்ற பின் பாசா அவன் வீட்டார் அனைவரையுமே கொன்று போட்டான்.
   சிலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின் படி எரொபாவின் குடும்பத்தவர் அனை வரையும் பாசா அழித்தான்.

சான்று

1 அரசர் 15:25

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ரவேலின்_நாதாபு&oldid=2329582" இருந்து மீள்விக்கப்பட்டது