இழைபு (பாட்டின் வனப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இழைபு என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.

வல்லின ஒற்றெழுத்து வராமல் பாடும் ஆசிரியப்பா இழைபு வனப்பாகும். [1]

தொல்காப்பியர் பாடலின் ஒவ்வொரு அடியும் எழுத்தின் எண்ணிக்கையில் பாகுபடுத்தியுள்ளார். அதன் வழியில் பார்க்கும்போது ஆசிரியப்பாவின் நான்கு சீர்களில் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி ஆகிய ஐந்து அடிகளும் வரும்.

எடுத்துக்காட்டு

போந்து போந்து சார்ந்து சார்ந்து
தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
வண்டு சூழ விண்டு நீங்கி
நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்
ஊதை வீச ஊர வாய
மணியேர் நுண்தோ டொல்கி மாலை
நண்மணம் கமழும் பன்னல் லூர
அமையேர் வளைத்தோள் அம்பரி நெடுங்கண்
இணையீர் ஓதி ஏந்திள வனமுலை
இரும்பன் மலரிடை எழுந்த மாவின்
நறுந்தழை துயல்வரும் செறிந்தேந் தல்குல்
அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின்
மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுதல்
ஒலிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு
நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்
இருந்தளவு மலரளவு சுரும்பளவு நறுந்தொடையலள்
களனளவு களனளவு நலனளவு நலனளவு
பெருமணம் புணர்ந்தனை என்பவஃ
தொருநீ மறைப்ப ஒழிகு தன்றே [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1.  ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது
    குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து
    ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்
    இழைபின் இலக்கணம் இயைந்ததாகும். . – தொல்காப்பியம் செய்யுளியல் 234

  2. யாப்பருங்க விருத்தி, மேற்கோள். பக்கம் 896