இளங்குளம் தர்ம சாஸ்தா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளங்குளம் தர்ம சாஸ்தா கோயில்

இளங்குளம் தர்ம சாஸ்தா கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். கோயிலின் வருடாந்திர திருவிழாவில் சுமார் 15 யானைகளுடன் கஜமேளம், ஆனையூட்டு சிறப்பாக இடம்பெறுகின்றன. [1] [2]

வரலாறு[தொகு]

தென்னிந்தியாவின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக சாஸ்தா வழிபாடு கருதப்படுகிறது. இங்குள்ள மூலவர் 800 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. கோயில் நிர்வாகம் எடப்பாடி அரச குடும்பத்தின் கீழ் இருந்தது. முடியாட்சிக்குப் பின், 1978 ஆம் ஆண்டு வரை உள்ளூர் நிலப்பிரபுக்கள், கரயோகம் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகியோர் மூலமாக கோயில் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் அது பல்வேறு இந்து பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பரந்த குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பெரிய மறுசீரமைப்பின்போது கருவறையைச் சுற்றியுள்ள வெளிப்புற அமைப்பு சுத்தம்பலம் அகற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 2023இல், முழுக்க முழுக்க கல், மரம் மற்றும் செம்புகளால் ஆன புதிய கோயில் கட்டப்பட்டது. காலங்காலமாக நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்ட இக்கோயில் கிராமத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.

கஜமேளம்[தொகு]

கோயில் திருவிழாவின் கடைசி நாளன்று கோயிலின் கிழக்குப் பந்தலில் கஜமேளாவும், தொடர்ந்து புகழ்பெற்ற ஆனையூட்டும் நடத்தப்படுவது வழக்கம். அப்போது யானைகளுக்கு பழங்கள், விதைகள் கலந்த அரிசி உருண்டை வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thiru Utsavom 2016". பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.
  2. "Thiruutsavam" (PDF).

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]