இளங்கலை உடற்கல்வி
இளங்கலை உடற்கல்வி (Bachelor of Physical Education BPE அல்லது BPhEd ) என்பது சில பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் உடற்கல்விக்கான இளநிலைப் பட்டம் ஆகும். பல கனேடியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை இயக்கவியலுக்குப் பதிலாக இந்தப் பாடப் பிரிவு மாற்றப்பட்டது. விளையாட்டு அறிவியல், பயிற்சி மற்றும் வெளிப்புறக் கல்வி போன்றவற்றை கலைத்திட்டமாக உள்ளடக்கியது. [1] [2] இந்தியாவில், இளங்கலை உடற்கல்வி பட்டப்படிப்பு பிபிஎட் அல்லது பிபிஇ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டம் இரண்டு நிலைகளில் வழங்கப்படுகின்றன. சில இந்திய நிறுவனங்கள் , பட்டப் படிப்பிற்குப் பிறகான 1 அல்லது 2 வருட படிப்பை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் 3-4 ஆண்டுகள் BPE மற்றும் B.Sc. (PE,HE&S) படிப்பை வழங்குகின்றன, இதற்கு 10+2 தகுதி கல்வி முறை தேவை. வங்காளதேசம், சிட்டகாங் பல்கலைக்கழகம் உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் துறையின் கீழ் BPE (4 ஆண்டுகள்) பட்டப் படிப்பினை வழங்குகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Bachelor of Physical Education". ஆக்லாந்துப் பல்கலைக் கழகம். Archived from the original on 26 May 2010. பார்க்கப்பட்ட நாள் 24 July 2010.
- ↑ "Bachelor of Physical Education (BPhEd)". ஒட்டாகோ பல்கலைக் கழகம். Archived from the original on 26 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 24 July 2010.