இல்சே சௌனல்க்னே
இல்சே சௌனல்க்னே | |
---|---|
பிறப்பு | 19 நவம்பர் 1976 சுமர்லா, லாத்வியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | லாத்வியா பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிக்கையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1999-தற்போது வரை |
துணைவர் | குண்டர்சு ரீடர் |
பிள்ளைகள் | 2 |
இல்சே சௌனல்க்னே- ரீடர் ( Ilze Jaunalksne-Rēdere ) (பிறப்பு நவம்பர் 19, 1976, சூர்மலா ) லாத்வியாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் மற்றும் டிவி 3 என்ற லாத்வியாவின் தொலைக்காட்சியின் நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியான நத்திங் பெர்சனல் என்பதன் ஆசிரியரும் மற்றும் தொகுப்பாளரும் ஆவார். 2005 முதல் 2008 வரை லாத்வியாவின் தொலைக்காட்சி நிறுவனமான எல்டிவி 1 நடப்பு விவகாரங்கள் நிகழ்ச்சியான டி ஃபேக்டோ என்பதன் தொகுப்பாளராகவும் இருந்தார்.[1] [2]
பணிகள்
[தொகு]மார்ச் 2006 இல் டி ஃபேக்டோவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த லாத்வியன் தேசிய அரசியல் தலைவர்கள் பணம் கொடுத்து வாக்குகளை சேகரிப்பதை வெளிபடுத்தினார்.[3][2] இது குறித்த இவரது அறிக்கை ஒரு அமைச்சர் பதவி விலக செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சில உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில், இவரது தொலைபேசி சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கப்பட்டது. இவரது உரையாடல்கள் அரசாங்கத்தில் உள்ள இவரது எதிரிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.[3][2]
இந்த அத்துமீறலை எதிர்த்து இல்சே லாத்விய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வாறு தனியுரிமை மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, லாத்வியாவில் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இது.[3][2] நிதி அமைச்சகமும் மாநில வருவாய் சேவையும் இச் செயலைச் செய்ததாகக் கண்டறியப்பட்டது.[3] இவரது அழைப்புகளை சட்டவிரோதமாக பதிவு செய்ததற்காகவும், உடரையாடல்களைப் பகிரங்கப்படுத்தியதற்காகவும் லாத்வியன் நிதிக் காவல்துறை அவருக்கு 100,000 லாத்துகளை ($187,000) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.[3]
விருது
[தொகு]இல்சே 2007ஆம் ஆண்டு சர்வதேச வீரதீர பெண்கள் விருதைப் பெற்றார்.[3][2][4] ஆனால், குழந்தை பிறக்க இருந்ததால் இவரால் விழாக்களில் பங்கேற்க முடியவில்லை.[5] 2021 ஆம் ஆண்டில், இவருக்கு லாத்வியாவின் மூன்று நட்சத்திர தகுதியின் 4 ஆம் வகுப்பு கௌரவம் வழங்கப்பட்டது. இது லாத்வியாவிற்காக சிறப்பாக சேவை செய்யும் குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயர்தர ஆணையாகும்.[6][7]
சொந்த வாழ்க்கை
[தொகு]2019இல் இல்சே இல்சே சௌனல்க்னே சக பத்திரிகையாளர் குண்டர்சு ரீடர் என்பவரை மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IIP Publications -". IIP Publications (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Department Of State. The Office of Electronic Information, Bureau of Public Affairs (2007-03-07). "Honorees". 2001-2009.state.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "IIP Publications -". IIP Publications (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ "US trumpets achievement of Latvian journalist". eng.lsm.lv. 30 March 2017. http://www.lsm.lv/en/article/societ/society/us-trumpets-achievement-of-latvian-journalist.a230419/.
- ↑ "Terrific Women". National Review (in அமெரிக்க ஆங்கிலம்). 2007-03-09. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ "The Order of the Three Stars | Chancellery of the President of Latvia". www.president.lv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-31.
- ↑ "Order of Three Stars". wawards.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-31.