இலைவடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏலந்தஸ் மிஸ்டில் இலை வடு

இலைவடு ( leaf scar ) என்பது தாவர தண்டிலிருந்து இலை உதிர்ந்த பின் அவ்விடத்தில் ஏற்படும் அடையாளம் ஆகும். தண்டின் மீது இலைக்காம்பின் அமைவிடத்தை இது காட்டுகிறது. குறிப்பாக கிளையின் கணுக்குருத்துகளில் ( axillary buds ) இது காணப்படும்.

தோற்றம்[தொகு]

இலையுதிர் தாவரங்களில் வளர்ச்சிக்கு உகந்த பருவகாலத்தின் இறுதியில் இலை வடுக்கள் தோன்றுகின்றன. இந்த காலத்தில் தன்டிற்கும் இலைக்காம்பிற்கும் இடையே பிரிக்கும் திசு ( abscission layer ) தோன்றுகிறது. இத்திசு தன்டிற்கும் இலைக்கும் இடையே உள்ள இணைப்பைத் துண்டித்து இலையை உதிரச்செய்கிறது. இலை உதிர்ந்தபின் அவ்விடத்தில் ஒரு வடுவை தோற்றுவிக்கிறது.[1]

கற்றைவடு[தொகு]

கற்றை வடுக்கள் வட்ட வடிவில்அமைந்திருக்கும். இவை இலை வடுவின் உட்பகுதியில் காணப்படும். தண்டையும் இலையையும் இணைக்கும் கடத்து திசுக்களின் அமைவிடத்தின் அடையாளமே கற்றை வடுக்கள் ஆகும்.[2] கற்றை வடுக்களின் எண்ணிக்கை தாவரங்களை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏஸ்குலஸ் ஹிப்போகாஸ்டானம் இலை வடு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winter twigs". Oregon state university. Retrieved 8 November 2015.
  2. Dirr, Michael Illustrations by Bonnie Dirr (1990). Manual of woody landscape plants. (4. ed., rev. ed.). [S.l. ISBN 0-87563-344-7.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leaf scars
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைவடு&oldid=3522754" இருந்து மீள்விக்கப்பட்டது