இலியோன்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியோன்சைட்டு
Lyonsite
[[Image:
|240px]]
பொதுவானாவை
வகைவனேடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu3Fe+34(VO4)6
இனங்காணல்
நிறம்கருப்பு; பாலேடு வெண்மையில் பளபளப்பாக ஒளி பிரதிபலிக்கும்.
படிக இயல்புதட்டையாக உருவான படிகங்கள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புநன்றாக {001} இல்
விகுவுத் தன்மைஉடையும்
மிளிர்வுஉலோகப் பொலிவு
கீற்றுவண்ணம்அடர் சாம்பல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.215 கணக்கிடப்பட்டது
மேற்கோள்கள்[1][2][3]

இலியோன்சைட்டு (Lyonsite) என்பது Cu3Fe+34(VO4) 6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் வனேடேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. உலோகப் பொலிவுடன் காணப்படும் இக்கனிமம் ஒளிபுகா பண்பைப் பெற்றுள்ளது. செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் இலியோன்சைட்டு பெரும்பாலும் தட்டையான மெல்லடுக்குகளாகவே படிகமாகிறது. அடர் சாம்பல் நிறத்தில் கோடுகளும் சரியான பிளவும் கொண்டதாக இக்கனிமம் தோன்றுகிறது. பன்னாட்டு கனிமவியலார் சங்கம் இலியோன்சைட்டை Lyo என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. [4]

இலியோன்சைட்டு எரிமலை வாய் பிளவுகளில் பதங்கமாதல் முறையில் தோன்றுகிறது. பெரும்பாலும் ஓவர்டெவன்சைட்டும் தேனார்டைட்டு கனிமங்களும் இதனுடன் சேர்ந்தே காணப்படுகின்றன. முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்காவிலுள்ள எல் சால்வடோர் நாட்டின் இசால்கோ எரிமலையில் இலியோன்சைட்டு கண்டறியப்பட்டது. 1916 ஆம் ஆண்டிற்கும் 1998 ஆம் ஆண்டிற்கும் இடைபட்ட காலத்தில் வாழ்ந்த அமெரிக்காவின் தார்ட்மவுத்து கல்லூரியின் கனிமவியலாளர் இயான் பார்தோலோமிவ் இலியோன்சு நினைவாக கனிமத்திற்கு இலியோன்சைட்டு எனப் பெயரிடப்பட்டது. செருமனி நாட்டின் துரிங்கியா மாநிலத்தில் உள்ள இலிச்சென்பெர்க் அப்செட்சர் சுரங்கத்திலும் இலியோன்சைட்டு காணப்படுகிறது.[2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineral Handbook
  2. 2.0 2.1 Webmineral
  3. 3.0 3.1 Mindat
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியோன்சைட்டு&oldid=3812020" இலிருந்து மீள்விக்கப்பட்டது