இலால் பாபு ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலால் பாபு ராய்
Lal Babu Rai
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989-1996
முன்னையவர்லாலு பிரசாத் யாதவ்
பின்னவர்இராச்சீவ் பிரதாப் ரூடி
தொகுதிசப்ரா மக்களவைத் தொகுதி, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூலை 1946 (1946-07-29) (அகவை 77)
சிரந்து, சரண் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிசனதா தளம்
துணைவர்சாரதா தேவி
பிள்ளைகள்4

இரீட்டா சிங் திலீப் குமார் பிரதீப் குமார்

அணில் குமார்
மூலம்: [1]

இலால் பாபு ராய் (Lal Babu Rai) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1946 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். சாரதா தேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 1975 ஆம் ஆண்டில் சனசங்கம் கட்சியின் வேட்பாளராக பீகார் மாநிலத்தின் சப்ரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1990 ஆம் ஆண்டில் சனதா தளம் கட்சியின் உறுப்பினராக பீகார் மாநிலத்தின் சப்ராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Data India. Press Institute of India. 1990. பக். 322. https://books.google.com/books?id=K4FDAAAAYAAJ. பார்த்த நாள்: 18 May 2020. 
  2. "It is a Clash of 'Stylish' Titans in Bihar's Saran as Rajiv Rudy, Chandrika Rai Give Classy Twist to LS Battle". News18. 3 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2020.
  3. India. Parliament. Lok Sabha (1995). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 13. https://books.google.com/books?id=wqJXAAAAMAAJ. பார்த்த நாள்: 30 December 2020. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்_பாபு_ராய்&oldid=3847718" இலிருந்து மீள்விக்கப்பட்டது