இலலிதா ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலிதா ஐயர்
Lalita Iyer
தொழில்எழுத்தாளர், ஊடகவியலாளர், கட்டுரையாளர்
மொழிஆங்கிலம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நான் கர்ப்பமாக இருக்கிறேன், டெர்மினலில் இல்லை, யூ இடியட், தி ஹோல் ஷெபாங்: I'm Pregnant, Not Terminally Ill, You Idiot!
பெண்ணாக இருப்பதன் ஸ்டிக்கி பிட்ஸ், The Whole Shebang: Sticky Bits of Being a Woman
ஸ்ரீதேவி: இதயங்களின் ராணி Sridevi: Queen of Hearts

இலலிதா ஐயர் (Lalita Iyer) என்பவர் இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். நான் கர்ப்பமாக இருக்கிறேன், டெர்மினலில் இல்லை, யூ இடியட், தி ஹோல் ஷெபாங்: பெண்ணாக இருப்பதன் ஸ்டிக்கி பிட்ஸ், மற்றும் ஸ்ரீதேவி: இதயங்களின் ராணி உட்படப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் குழந்தைகள் இலக்கியங்களையும் எழுதியுள்ளார். இலலிதா சிக்விட் மற்றும் மம்மிகோலைட்லி வலைப்பதிவுகளின் ஆசிரியர் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இலலிதா மும்பையில் உள்ள வேதி தொழில்நுட்ப நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் இயற்கைப் பொருட்களில் முதுநிலை மருந்தியல் பட்டம் பெற்றார். 2019-ல், டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் நடன இயக்க சிகிச்சையில் முதுகலை பட்டயப் படிப்பினை முடித்தார்.[1]

தொழில்[தொகு]

இலலிதா ஐயர் ஒரு மருந்தாளுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையாளராகப் பெற்றோரைப் பற்றி எழுதினார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[3] பிலிம்பேர் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றியதும் இவர் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றியதில் அடங்கும்.[4] இவர் இரண்டு வலைப்பதிவுகளில் எழுதியுள்ளார். சிக்விட் ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு பத்தியாகத் தொடங்கியது. மம்மிகோலைட்லி (Mommygolightly) என்பது தாய்மையுடன் தொடர்புடையது.[5][6][7] புனேயில் உள்ள சஹ்யாத்ரி பள்ளியிலும், மும்பையில் உள்ள அக்ஷரா பள்ளியிலும் கல்வியாளராக இருந்துள்ளார்.[8]

இலலிதாவின் முதல் புத்தகம், நான் கர்ப்பமாக இருக்கிறேன், நோயில்லாமல் இருக்கிறேன், யூ இடியட்! என்பதாகும் இது 2013-ல் வெளியாகியது.[2] தி கோல் சீபேங்:சிடுக்கி பிட்சு ஆப் பீயிங் அ வுமன் (The Whole Shebang: Sticky Bits of Being a Woman) என்பது 2017-ல் வெளியான, இவரது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்கும் நூலாகும்.[4][9] ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீதேவி: இதயங்களின் ராணி என்ற தலைப்பில், 2018-ல் வெளியிடப்பட்டது.[10] இலலிதா குழந்தைகளுக்காக இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவை: தி பாய் ஹூ ஸ்வாலோடு எ நெயில் அண்ட் அதர் ஸ்டோரிஸ் (2016) மற்றும் தத்தாஸ் பூசணிக்காய் (2020).

2018ஆம் ஆண்டில், மஜ்லிஸ் சட்ட மையத்தின் சமூக ஊடகங்களில் ஹேப்பி அன்மேரிடு ("Happily Unmarried") விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக இவர் ஒரு இடுகையை எழுதினார். இது இவரது தொழில், குலாவுதல், திருமணம் மற்றும் ஒற்றை தாய்மை பற்றிய கண்ணோட்டத்தை விவரிக்கிறது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Snigdha (7 August 2019). "I Now Know That My Body Never Lies: Lalita Iyer On Dance Movement Therapy". SheThePeople. https://www.shethepeople.tv/news/lalita-iyer-dance-movement-therapy/. 
  2. 2.0 2.1 Punj, Deepshikha (12 July 2013). "Overrated, life-changing: Getting pregnant and getting real". The New Indian Express. https://www.newindianexpress.com/lifestyle/books/2013/jul/14/Overrated-life-changing-Getting-pregnant-and-getting-real-496466.html. 
  3. "Lalita Iyer". தி இந்து. 4 February 2013. https://www.thehindu.com/books/lalita-iyer/article4344155.ece. 
  4. 4.0 4.1 Mohan, Shriya (26 August 2013). "Baby on board!". The Hindustan Times. https://www.hindustantimes.com/books/baby-on-board/story-83CUNGoKpKlMTPbNnfe5IN.html. 
  5. Kala, Leher (14 September 2013). "The Trimester Trap". The Indian Express. http://archive.indianexpress.com/news/the-trimester-trap/1168974/0. 
  6. Vachharajani, Bijal (24 February 2016). "What’s in your tiffin?". The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/whats-in-your-tiffin/article8274278.ece. 
  7. Motiani, Priya (2016-08-01). "Mommy-Go-Lightly Founder Lalita Iyer Shares With JWB Her Mommy-Go-Crazy Moment" (in en-US). Jaipur Women Blog - Stories of Indian Women இம் மூலத்தில் இருந்து 25 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161025182753/http://jaipurwomenblog.org/mommy-go-lightly-founder-lalita-iyer-shares-with-jwb-her-mommy-go-crazy-moment/. 
  8. "Lalita Iyer". Neev Literature Festival. பார்க்கப்பட்ட நாள் 17 October 2022.
  9. K., Sabah (28 October 2017). "‘The Whole Shebang’ review: A light read that repackages age-old stories". ThePrint. https://theprint.in/pageturner/afterword/the-whole-shebang-the-sticky-bits-in-our-daily-lives/13840/. 
  10. "When Sridevi called her smash hit film Himmatwala ‘bad luck’". இந்தியன் எக்சுபிரசு. Press Trust of India. 22 October 2018. https://indianexpress.com/article/entertainment/bollywood/when-sridevi-called-her-smash-hit-film-himmatwala-bad-luck-5412900/. 
  11. Chaudhuri, Zinnia Ray (October 21, 2018). "‘Happily unmarried’: An online project reminds Indian women to celebrate singlehood". Scroll.in. https://scroll.in/magazine/896455/happily-unmarried-an-online-project-reminds-indian-women-to-celebrate-singlehood. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலிதா_ஐயர்&oldid=3742166" இலிருந்து மீள்விக்கப்பட்டது