இலம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலம்பகம் என்பது காப்பியக் கட்டமைப்பின் புறநிலைக் கட்டமைப்புகளுள் ஒன்றாக தண்டியலங்கார ஆசிரியரால் கூறப்பட்டுள்ள ஒன்றாகும். ஏனையவை சருக்கம் மற்றும் பரிச்சேதம் முதலாயின.

இலம்பகம் என்பதற்கு மாலை அல்லது பேறு என்று பொருள். இலம்பகம் எனும் கட்டமைப்பு திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந் நூலுள் முத்தி இலம்பகம் தவிர ஏனைய எல்லா இலம்பகங்களும் பெண்டிர் பெயரால் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலம்பகம்&oldid=2592479" இருந்து மீள்விக்கப்பட்டது