உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சிய இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலட்சிய இயந்திரம் (ideal machine) என்பது நூறு விழுக்காடு பயனுறுதிறன் கொண்ட ஓர் இயந்திரம். இலட்சிய இயந்திரம் என்பது வெறும் கருதுகோள் அளவிலான ஓர் இயந்திரமே. உண்மையில் எந்த ஓர் இயந்திரத்தின் பயனுறுதிறனும் 100 விழுக்காடு இருக்காது. உராய்வு போன்றவற்றால் நாம் ஓர் இயந்திரத்திற்குத் தரும் ஆற்றலில் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இலட்சிய இயந்திரக் கருத்துருவை உண்மையான இயந்திரங்களின் பயனுறுதிறனை ஒப்பிட பயன்படுத்துகின்றனர். [1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. J. Uicker, G. R. Pennock, and J. E. Shigley, 2003, Theory of Machines and Mechanisms, Oxford University Press, New York.
  2. B. Paul, 1979, Kinematics and Dynamics of Planar Machinery, Prentice Hall.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சிய_இயந்திரம்&oldid=1629760" இலிருந்து மீள்விக்கப்பட்டது