உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை பறக்கும் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை பறக்கும் பாம்பு
இலங்கையில் உள்ள கண்டலமா என்ற கிராமத்தில் பிடிக்கப்பட்டது.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
துணைக்குடும்பம்:
கொலுபிரினே
பேரினம்:
கிரைசோபெலேயா
இனம்:
கி. taprobanica
இருசொற் பெயரீடு
கிரைசோபெலேயா தாப்ரோபிராங்கியா
(சுமித், 1943)

இலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வன வகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். இதன் பூர்வீகம் இலங்கையாக இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இது கிரிசொபியா (Chrysopelea) என்ற குடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். இவை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.[2][3] பாம்பு இனங்களில் ஒன்றான இது, விசத் தன்மை குறைந்து காணப்படுகிறது.

பரவல்

[தொகு]

உலகில் உள்ள பாம்பு இனங்களில் இது ஒரு அரிதானது ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிறது. தென்கிழக்காசியா பகுதியில் இலங்கை உட்பட வியட்நாம், கம்போடியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அரிதாகவும் காணப்படுகிறது.[4]

தோற்றம்

[தொகு]

உடல் வாக்கில் அனைத்துப் பாம்புகளைப்போல் தோன்றினாலும் இதன் உடலின் மேல் பகுதியில் கட்டுவிரியன் பாம்பைப்போல் கருப்பு கோடுகள் காணப்படுகின்றன. தலைப்பகுதியில் வலுவான கருப்பு நிறத்தில் நல்ல பாம்பைப் போல் படம் எடுப்பதுபோன்ற தோற்றம் கொண்ட கோடுகள் உள்ளன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narayanan, S.; Mohapatra, P.; Ganesh, S.R.; Srinivasulu, C.; Wickramasinghe, L.J.M. (2021). "Chrysopelea taprobanica". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T197189A76381871.en. https://www.iucnredlist.org/species/197189/76381871. பார்த்த நாள்: 30 October 2022. 
  2. taprobanica SMITH, 1943ரெப்டைல்ச் டெடாபாஸ்
  3. கோவையில் அரிய வகை 'பறக்கும் பாம்பு' மீட்புதி இந்து தமிழ் 21 மார்ச் 2016
  4. snake spotted in Tamil Naduதி இந்து 22 மார்ச் 2016
  5. snake spotted in Tamil Naduதி இந்து 22 மார்ச் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_பறக்கும்_பாம்பு&oldid=4436631" இலிருந்து மீள்விக்கப்பட்டது