இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை
வகைஇலங்கை அரச நிறுவனங்கள்
தலைமையகம்64, காலி வீதி கொழும்பு 03

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் (Civil Aviation Authority of Sri Lanka), 2002ம் ஆண்டின் 34ம் இலக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை சட்டத்தின் கீழ் 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதியன்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையாக மாற்றியமைக்கப்பட்டது.

இதன் முதன்மையான பணியாக சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தால் (ICAO) பின்பற்றப்படுகின்ற, சர்வதேச நியமங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் என்பவற்றுக்கமைவாக சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பினை மேம்படுத்தத்தக்க முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி, பிரஜைகளது உயர் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கான பிரதானதொரு பங்களிப்பாளராகவும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை விளங்குகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]