கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன்படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன. இதில் 9 மாகாணங்களும் தமக்கென ஒரு கொடியினை கொண்டுள்ளன அவற்றின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மாகாண கொடிகள் 1987 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. வடகிழக்கு மாகாணக் கொடி 1988 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2007 இல் வடகிழக்கு மாகாணம் வட மாகாணம், கிழக்கு மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதும், இரு புதிய கொடிகள் உருவாகின.
இவற்றில் பல கொடிகள் பண்டைய சிங்களக் கொடிகளின் அல்லது சின்னங்களின் அடிப்படையில் அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி அமைந்துள்ளன.[1]