உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்மென் ரிம்புயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்மென் ரிம்புயி (Lahkmen Rymbui) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் மேகாலயா மாநில அரசியலில் ஐக்கிய சனநாயகக் கட்சி அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 2008-ஆம் ஆண்டு, மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் வார் செயிந்தியா சட்டமன்ற தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டில், அம்லாரெம் தொகுதியிலிருந்து ஐக்கிய சனநாயகக் கட்சியின் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டு முதல் கான்ராட்டு சங்மா அமைச்சகத்தில் எல்லைப் பகுதிகள் மேம்பாடு, கல்வி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், பிப்ரவரி 2020 முதல் மார்ச்சு 2023 வரை மேகாலயாவின் உள்துறை (காவல்துறை) அமைச்சராகவும் இருந்தார். அக்டோபர் 2023 முதல் உள்துறை (காவல்துறை), எல்லைப் பகுதிகள் துறை, கல்வி, மாவட்டக்குழு விவகாரங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார்.

2023 சட்டமன்றத் தேர்தலில், அம்லாரம் தொகுதியிலிருந்து ஐக்கிய சனநாகக் கட்சி வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மேகாலயா அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பதவி வகிக்கிறார் [1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A Chief Minister By Chance
  2. "Krymen Shylla of UDP youngest among Meghalaya ministers | The Shillong Times". www.theshillongtimes.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-28.
  3. HSPDP MLAs Want To Serve People By Being In The Government
  4. "Lahkmen Rymbui(United Democratic Party):Constituency- AMLAREM(WEST JAINTIA HILLS) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2025-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்மென்_ரிம்புயி&oldid=4378990" இலிருந்து மீள்விக்கப்பட்டது