இலக்கன் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்கன் சிங் யாதவ்
உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2008
தொகுதிபிதர்வார் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1964 (1964-06-04) (அகவை 59)
பார் கிராமம், குவாலியர் மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சி இதேகா
(இந்திய தேசிய காங்கிரசு)
துணைவர்சர்தா சிங்
வாழிடம்(s)லட்சுமிகானி, லசுகார், குவாலியர் மாவட்டம்
கல்விஇளம் அறிவியல் வேளாண்மை[1]
முன்னாள் கல்லூரிவேளாண்மைக் கல்லூரி, ஜபல்பூர்
தொழில்அரசியல்வாதி
As of 23 சூலை, 2018
மூலம்: ["Biography" (PDF). Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly.]

இலக்கன் சிங் யாதவ் (Lakhan Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார். இவர் கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

யாதவ் தனது ஆரம்பக்கால அரசியல் வாழ்க்கையைப் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தொடங்கினார். 1990-இல் கிர்ட் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பின்னர், மீண்டும் 1993-இல் கிர்டிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு பலேந்து சுக்லாவிடம் தோல்வியடைந்தார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்றைய அமைச்சர் பலேந்து சுக்லாவை தோற்கடித்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மத்தியப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வராக இருந்த திக்விஜய சிங்கின் ஆதரவின் கீழ் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தார்.

இவர் 2003 சட்டமன்றத் தேர்தலில் கிரிட் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் பிரிஜேந்திர திவாரியிடம் தோல்வியடைந்தார்.

2008-இல் புதிதாக உருவாக்கப்பட்ட பிதர்வார் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் பிரிஜேந்திர திவாரியை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான அனூப் மிசுராவை 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2018 சட்டமன்றத் தேர்தலில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சரும் மொரீனாவின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான சிறீ அனூப் மிசுராவை 12000 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் மீண்டும் தோற்கடித்தார்.

2018ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசு கட்சி ஆட்சியை அமைத்தது. இதன் அமைச்சரவையில் யாதவ் கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நல அமைச்சகத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் பார்வைகள்[தொகு]

யாதவ் காங்கிரசு கட்சியின் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்; 1999 முதல் மத்தியப்பிரதேச காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

யாதவ் சாரதா சிங் யாதவை மணந்தார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கன்_சிங்_யாதவ்&oldid=3926411" இலிருந்து மீள்விக்கப்பட்டது