உள்ளடக்கத்துக்குச் செல்

இரூட் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரூட் விளைவு (Root effect) என்பது மீன்களின் குருதிவளிக்காவியில் நிகழும் ஓர் உடலியல் நிகழ்வு ஆகும். இதன் கண்டுபிடிப்பாளரான ஆர். டபிள்யூ. இரூட் பெயரில் இந்த விளைவு அழைக்கப்படுகிறது. நேர்மின்னி அல்லது கார்பனீராக்சைடு செறிவு அதிகரிக்கும் போது (குறைந்த காரகாடித்தன்மைச் சுட்டெண்) குருதிவளிகாவியின் தொடர்பும் ஆக்சிசனை எடுத்துச்செல்லும் திறனும் குறைகிறது.[1][2] இரூட் விளைவு போர் விளைவிலிருந்து வேறுபடுகிறது. போர் விளைவில் ஆக்சிசனுடனான தொடர்பு மட்டுமே குறைகிறது. ஆனால் இரூட் விளைவில் குறைந்த காரகாடித் தன்மையில் குருதிவளிக்காவியின் ஒத்துழைப்பு இழப்பைக் காட்டுகின்றன. இதன் விளைவாக Hb-O2 விலகல் வளைவு வலதுபுறம் மட்டுமல்லாமல் கீழ்நோக்கி மாற்றப்படுகிறது. குறைந்த காரகாடியில், இரூட் விளைவைக் காட்டும் குருதிவளிக்காவி 20kPa வரை ஆக்சிசன் இழுவிசை இருந்தபோதிலும் முழுமையாக ஆக்சிசனேற்றப்படாது. இந்த விளைவு மீனில் உயர் ஆக்சிசன் சரிமானத்திற்கு எதிராக ஆக்சிசனை நீந்து பைகளில் இறக்கம் செய்ய குருதிவளிக்காவி அனுமதிக்கிறது.[3] இந்த விளைவானது விழிநடுப்படலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. விழித்திரையில் குருதிக்குழல் வலைப்பின்னல் ஆக்சிசனை செலுத்துகின்றது. உரூட் விளைவு இல்லாதிருந்தால், விழித்திரை ஆக்சிச்னை தமனி இரத்தத்திலிருந்து நேரடியாகச் சிரை இரத்தத்திற்கு மாற்றும், இதனால் ஆக்சிசன் செறிவுக்குச் செயல்திறன் குறைவுடையதாக மாறும்.[4] அமில தகைவின் போது சிவப்பு தசைக்கு அதிக ஆக்சிசனை வழங்குவதில் நாட்ட இழப்பு காரணமாகிறது என்று அனுமானிக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ito N.; Komiyama N. H.; Fermi G. (1995). "Structure of Deoxyhaemoglobin of the Antarctic Fish Pagothenia bernachii with an Analysis of the Structural Basis of the Root Effect by Comparison of the Liganded and Unliganded Haemoglobin Structures". Journal of Molecular Biology 250 (5): 648–658. doi:10.1006/jmbi.1995.0405. பப்மெட்:7623382. 
  2. Pelster B (December 2001). "The generation of hyperbaric oxygen tensions in fish". News Physiol. Sci. 16 (6): 287–91. doi:10.1152/physiologyonline.2001.16.6.287. பப்மெட்:11719607. http://physiologyonline.physiology.org/content/16/6/287.long. 
  3. Verde, C., A. Vergara, D. Giordano, L. Mazzarella, and G. di Prisco. 2007. The Root effect - a structural and evolutionary perspective. Antarctic Science 19:271-278.
  4. "Evolution of oxygen secretion in fishes and the emergence of a complex physiological system". Science 307 (5716): 1752–7. March 2005. doi:10.1126/science.1107793. பப்மெட்:15774753. 
  5. "Root Effect Hemoglobin May Have Evolved to Enhance General Tissue Oxygen Delivery". Science 340 (6138): 1327–9. June 2013. doi:10.1126/science.1233692. பப்மெட்:23766325. https://flore.unifi.it/bitstream/2158/1022682/2/Science.pdf. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரூட்_விளைவு&oldid=3187179" இலிருந்து மீள்விக்கப்பட்டது