இருந்தையூர்
Jump to navigation
Jump to search
இருந்தையூர் வையை ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளதோர் ஊர்.
கூடல் அழகர் கோயில் இங்கு உள்ளது.
இதனால் ‘திருவிருந்த நல்லூர்’ என்னும் பெயரை இவ்வூர் பெற்றிருந்தது. இந்தப் பெயரின் மரூஉமொழி ‘இருந்தை’.
இருந்தையூர்க் கொற்றன் புலவன் இவ்வூரில் வாழ்ந்தவர்.
பெரியாழ்வார் மதுரை வந்து பாண்டியனின் பொற்கிழி அறுத்த இடம் எனக் கருதப்படுகிறது.
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இருந்தையூரின் ஒரு பகுதி.
திருவாதவூர் திருமறைநாதர் கோயில் சென்றடையும் முன்பு சற்று தொலைவில் உள்ளது மாணிக்கவாசகப்பெருந்தகையார் திருக்கோவில்...
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005