இருதயோலியம் உப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,2- மற்றும் 1,3-இருதயோலியம் நேர்மின் அயனிகள்

இருதயோலியம் உப்புகள் (Dithiolium salts) என்பவை [(RC)3S2]+X− (R = H, ஆல்கைல், அரைல், இத்யாதி) என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் சேர்மங்களைக் குறிக்கும். இந்த உப்புகள் ஆலைடுகள் போன்ற பல்வேறு அயனிகளைக் கொண்ட ஒரு சமதள கரிம நேர்மின் அயனியைக் கொண்டிருக்கின்றன. 1,2- மற்றும் 1,3-இருதயோலியம் நேர்மின் அயனிகள் இரண்டு மாற்றியன்களிலும் ஐந்து-உறுப்பு வளைய நேர்மின் அயனிகளாகக் காணப்படுகின்றன. இணை கந்தக அணுக்களின் ஒப்பீட்டு நிலைகளைப் பொறுத்து நேர்மின் அயனிகள் வேறுபடுகின்றன. இரண்டு மாற்றியன்களும் ஒரு சமதள வளையத்தைக் கொண்டுள்ளன. 6π எலக்ட்ரான்கள் இருப்பதால் இவை அரோமாட்டிக்கு சேர்மங்களாகும்.[1] எடுத்துக்காட்டாக, 1,2-இருதயோலியம் வளையமானது மூன்று கார்பன்களின் அல்லைல் நேர்மின் அயனியாகக் குறிப்பிடப்படலாம். ஒவ்வொரு கந்தக அணுவும் அதன் ஒற்றை இணை எலக்ட்ரான்களில் ஒன்றைத் தந்து மொத்தம் மூன்று இணைகளைக் கொடுக்கின்றன.[2]

இருபீனைல்-1,2-இருதயோலியம் நேர்மின் அயனியின் கட்டமைப்பு (பைசல்பேட்டு உப்பாக). தெரிவு செய்யப்பட்ட தொலைவுகள்: S-S = 2.019(5); S-C=173(1); Cring-Cring = 1.38(1) Å.[3]

தயாரிப்பு[தொகு]

1,3-இருகீட்டோன்களை H2S மற்றும் புரோமின் போன்ற ஆக்சிசனேற்றிகளைச் சேர்த்து சூடுபடுத்தி 1,2-இருதயோலியம் உப்புகள் தயாரிக்கப்படுகின்றன.[2]

(RCO)2CH2 + 2 H2S + Br2 → [(RC)3S2]+Br + 2 H2O + HBr

தொடர்புடைய நிறைவுறா இருதயோ அல்லது முத்தயோகார்பனேட்டுகளை ஆல்கைலேற்றம் செய்து 1,3-இருதயோலியம் நேர்மின் அயனிகள் தயாரிக்கப்படுகின்றன:

[(RC)2S2C=E] + R+ → [(RC)2S2CER]+

1,2-இருதயோல்-2-ஒன் சேர்மங்களும் இவ்வினையை ஒத்த மின்னணு கவரிகள் வினையின் வழியாக 1,2-இருதயோலியம் உப்புகளைக் கொடுக்கின்றன.

டெட்ராதயாபல்வேலின்களை ஆக்சிசனேற்றம் செய்யும் போது 1,3-இருதயோலியம் நேர்மின் அயனி உப்புகள் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Noël Lozac'h, Madeleine Stavaux (1981). "The 1,2- and 1,3-Dithiolium Ions". Advances in Heterocyclic Chemistry 27: 151–239. doi:10.1016/S0065-2725(08)60997-6. 
  2. 2.0 2.1 Hendrickson, A. R.; Martin, R. L. (1973). "Improved synthesis of alkyl substituted 1,2-dithiolium salts". Journal of Organic Chemistry 38: 2548–9. doi:10.1021/jo00954a028. 
  3. E. Uhlemann, F. Weller (1992). "3,5-Diphenyl-1,2-dithiolium-hydrogensulfat—Bildung und Struktur" (in de). Z. Naturforsch. B 47 (11): 1501–1504. doi:10.1515/znb-1992-1102. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதயோலியம்_உப்பு&oldid=3428810" இலிருந்து மீள்விக்கப்பட்டது