உள்ளடக்கத்துக்குச் செல்

இரிசா வெக்சுலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிசா வெக்சுலர்
பிறப்புசீட்டில், வாழ்சிங்டன்(மாநிலம்), அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல், அண்டவியல், வானியற்பியல்
பணியிடங்கள்சுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு
இணையதளம்
risawechsler.com

இரிசா எச். வெக்சுலர் (Risa H. Wechsler) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் SLAC தேசிய சுழன்முடுக்கி ஆய்வகத்தில் வானியற்பியல், துகளியற்பியல் பேராசிரியராகவும் உள்ளார்.[1] இவர் காவ்லி துகள் வானியற்பியல், அண்டவியல் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.[2] இவர் 2017 இல் இருந்து அமெரிக்க இயற்பியல் கழகத்தின் தெரிவுசெய்த ஆய்வுறுப்பினராக உள்ளார்.[3]

இவர் அண்டவியல் வல்லுனர்; பால்வெளி உருவாக்கத்திலும் அண்டப் பேரியல் கட்டமைப்பிலிம் புலமை சான்றவர்.[4] இவரது ஆர்வ்ம் வானியற்பியலிலும் கரும்பொருண்மத்திலும் கருப்பு ஆற்றலிலும் பொதிந்துள்ளது.[3] இவர் 2018 வரை கருப்பு ஆற்றல் கதிர்நிரல் கருவி கூட்டுமுனைவுக்கான இணை பரப்புரையாளராக விளங்கினார்.[5] இவர் கருப்பு ஆற்றல் அளக்கையில் முன்னணிப் பங்களிப்பு செய்துள்ளார்.[6]

கருப்பு ஆற்றலின் கமுக்கம் எனும் பி.பி.சி. ஒரைசன் அலைக்காட்சியிலும் [7] அறிவிய்ல் அலைநிரலின் விண்வெளி ஆழ்கமுக்கங்கள்: பெருவெடிப்பு வரலாற்றின் கமுக்கம் எனும் அலைக்காட்சியிலும் [8] கரும்பொருண்மங்கள் எனும் PBS அலைக்காட்சியிலும் தோன்றியுள்ளார்.[9] இவ 2019 இல் சான்பிரான்சிசுக்கோவில் உள்ள தற்கால யூத அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருள் ஒன்றை ஆக்சாசு அயோபெமியுடன் இணைந்து காட்சிப்படுத்தி உள்ளார்.[10]

கல்வி

[தொகு]

இவர் தன் இயற்பியல் இளவல் பட்டத்தை 1996 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். தன்முனைவர் பட்டத்தை சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2001 இல் பெற்றார்.[1] இவர் 2003 முதல் 2006 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நாசாவின் அபுள் ஆய்வுறுப்பினராக உள்ளார்.[11]

வெளியீடுகள்

[தொகு]

வெக்சுலரின் வெளியீடுகள் இங்கே உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Risa Wechsler". stanford.edu. Retrieved March 17, 2018.
  2. Gnida, Manuel. "Risa Wechsler named director of KIPAC". SLAC National Accelerator Laboratory. Retrieved 16 December 2018.
  3. 3.0 3.1 "SLAC's Risa Wechsler named American Physical Society Fellow". eurekaalert.org. October 1017. Archived from the original on டிசம்பர் 1, 2017. Retrieved November 27, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Risa Wechsler". Retrieved November 27, 2017.
  5. "DESI Team". Retrieved November 27, 2017.
  6. "Dark matter map puts Big Bang theory on trial". Retrieved March 17, 2018.
  7. "BBC Horizon: The Mystery of Dark Energy". Retrieved March 17, 2018.
  8. "அறிவிய்ல் அலைநிரலின் விண்வெளி ஆழ்கமுக்கங்கள்: பெருவெடிப்பு வரலாற்றின் கமுக்கம் எனும் அலைக்காட்சியிலும்". Retrieved March 17, 2018.
  9. "PBS Science Bytes: Dark Matters". Retrieved March 17, 2018.
  10. "In That Case: Havruta in Contemporary Art—Oxossi Ayofemi and Risa Wechsler". Retrieved November 12, 2019.
  11. "Hubble Fellows". Retrieved March 17, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிசா_வெக்சுலர்&oldid=3951402" இலிருந்து மீள்விக்கப்பட்டது