உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. கி. குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகவாச்சாரி கிருஷ்ண குமார்
மக்களவை-உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
1996–1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-08-07)ஆகத்து 7, 1942
அக்டோபர் 3, 1999(1999-10-03) (அகவை 57)
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்(கள்)சாந்தினி குமார், விஜயபிரியா
தொழில்அரசியல்வாதி, பட்டயக் கணக்கர்

இராகவாச்சாரி கிருஷ்ண குமார் (R. K. Kumar; ஆகத்து 7,1942-அக்டோபர் 3,1999) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவரும் ஆவார்.[1]

குடும்பம்

[தொகு]

குமார் ஆகத்து 7,1942 அன்று கே. சி. இராகவச்சாரி மற்றும் சீதாலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை வணிகத்தில் தேர்ச்சி பெற்றார். இறுதித் தேர்வுகளில் முதலிடம் பிடித்ததற்காக நேபாள மன்னரிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார். 1969ஆம் ஆண்டில் தனது இளங்கலைச் சட்டம் மற்றும் பட்டயக் கணக்கியல் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இவர், புது தில்லியில் உள்ள பட்டயக் கணக்காளர்கள் மொகிந்தர் பூரி நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். இவர் சாந்தினி குமார் மற்றும் விஜயப்பிரியாவை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.

தொழில்

[தொகு]

1983ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு கனரா வங்கியின் இயக்குநராகப் பணியாற்றினார்.

1996 ஏப்ரல் 3 முதல் 1999 அக்டோபர் 10 வரை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஏப்ரல் 1996 முதல் மே 1998 வரை நிதித்துறை இணை அமைச்சராகவும் இருந்த இவர், அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Members of the rajya Sabha - K" (PDF).
  1. https://sansad.in/rs
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கி._குமார்&oldid=4116837" இலிருந்து மீள்விக்கப்பட்டது