உள்ளடக்கத்துக்குச் செல்

இராயப்பன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராயப்பன்பட்டி (Rayappanpatty) என்ற ஊர் தமிழ்நாட்டின், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமமாகும்.[1] இராயப்பன்பட்டி முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்து, பின்பு மாவட்டம் பிரிக்கப்பட்டதனால் தேனி மாவட்டத்திற்கு வந்தது. இக்கிராமம் உத்தமபாளையம் வட்டத்துக்கு உட்பட்டது. அஞ்சல் குறியீடு 625526

புவியியல் அமைப்பு

[தொகு]

இவ்வூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தேயிலை, ஏலக்காய், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறன. இது மூவாயிரம் குடும்பங்களும் முப்பதினாயிரம் மக்கள்தொகையையும் கொண்டது. இராயப்பன்பட்டி கடல் மட்டத்திலிருந்து 1250 அடி உயரத்தில் உள்ளது. இவ்வூர் மதுரையில் இருந்து 100 கி.மீ தூரத்திலும், தேனியிலிருந்து 35 கி.மீ தூரத்திலும், உத்தமபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 566 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வழிபாட்டுத்தலங்கள்

[தொகு]
  • புனித பனிமய அன்னை ஆலயம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Royappanpatti Village Population - Uthamapalayam - Theni, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2021-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயப்பன்பட்டி&oldid=4414021" இலிருந்து மீள்விக்கப்பட்டது