இராபர்ட்டு மிராண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட்டு மிராண்டா
Robert Miranda
குல்பர்க்காவின் பேராயர்
சபைஉரோமன் கத்தோலிக்க பேராலயம்
உயர் மறைமாவட்டம்பெங்களூர்
மறைமாவட்டம்குல்பர்க்கா
நியமனம்24 சூன் 2005
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு4 மே 1978
ஆயர்நிலை திருப்பொழிவு18 ஆகத்து 2005
பிற தகவல்கள்
பிறப்பு10 ஏப்ரல் 1952 (1952-04-10) (அகவை 72)
குடியுரிமைஇந்தியன்
சமயம்உரோமன் கத்தோலிக்கு கிறித்துவர்

இராபர்ட்டு மிராண்டா (Robert Miranda) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பேராயராவார்.[1][2] 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று மங்களூர் நகரத்தில் இவர் பிறந்தார். உள்ளூர் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் மங்களூர் புனித அலோசியசு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[3] 1978 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று ஒரு பாதிரியாராகவும் 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று ஒரு பேராயராகவும் நியமிக்கப்பட்டார். குல்பர்காவின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதல் பேராயராக இவர் அறியப்படுகிறார்.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Diocese of Gulbarga : Bishop : Most Reverend Robert Michael Miranda". The Catholic Directory of India 2010. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  2. "Andhra Pradesh News : Briefly : New diocese created". தி இந்து. 26 June 2005. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. Rev. Fr. Robert Miranda of the Diocese of Mangalore has been appointed the first Bishop of the newly created Catholic Diocese of Gulburga.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 (24 June 2005). "Erezione della diocesi di Gulbarga e nomina del primo Vescovo"(in it). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 4 March 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டு_மிராண்டா&oldid=3920289" இலிருந்து மீள்விக்கப்பட்டது