இராணி பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணி பாக்
Rani Bagh (Hyderabad Zoo)
حیدرآباد کے چڑیا گھر
[[File:
இராணி பாக் விலங்கியல் பூங்கா
|]]
திறக்கப்பட்ட தேதி1861 (தாவரவியல் பூங்காவாக)[1]
இடம்ஐதராபாத், பாக்கித்தான் பாக்கித்தான்
பரப்பளவு53 ஏக்கர்கள் (21 ha)[1]
அமைவு25°22′56″N 68°20′35″E / 25.38223°N 68.34305°E / 25.38223; 68.34305ஆள்கூறுகள்: 25°22′56″N 68°20′35″E / 25.38223°N 68.34305°E / 25.38223; 68.34305
உயிரினங்களின் எண்ணிக்கை~70 (விலங்குகள்)[1]
~230 (தாவரங்கள்)[1]
வருடாந்திர வருனர் எண்ணிக்கைதோராயமாக ஆண்டுக்கு 3 மில்லியன் பார்வையாளர்கள்[1]

இராணி பாக் (Rani Bagh) என்பது பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணம், ஐதராபாத்து நகரில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்காவாகும். முன்னதாக தாசு தோட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இது விக்டோரியா மகாராணியின் நினைவாக மீண்டும் இராணி பாக் எனப் பெயர் சூட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில் அப்போதைய வேளாண் தோட்டக்கலை சங்கத்தால் முதலில் ஒரு தாவரவியல் பூங்காவாக நிறுவப்பட்டது. பின்னர் விலங்குகளும் இங்கு கொண்டு வரப்பட்டன.[1][2]

இராணி பாக் 58 ஏக்கர் (23 எக்டேர்) நிலத்தில் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஈத்கா, அப்பாசு பாய் பூங்கா, மிருகக்காட்சிசாலை மற்றும் புல்வெளிகள், சிறுவர் பூங்காக்கள், மெல்லோட்ட பாதைகள், படகு பயணத்திற்காக 50,000 சதுர அடியில் செயற்கை ஏரி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை நான்கு பகுதிகளாகும்.[2][3]

ஏறத்தாழ 21 வகையான பாலூட்டிகள், 41 வகையான பறவைகள் மற்றும் 10 வகையான ஊர்வன தவிர, இராணி பாக் விலங்கியல் பூங்காவில் 227 வகையான 3,177 மரங்களும் உள்ளன[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "SAVE RANI BAGH BOTANICAL GARDEN ACTION COMMITTEE". www.saveranibagh.org. 7 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 M. Hussain Khan (22 November 2008). "HYDERABAD: Renovated Rani Bagh awaits visitors". Dawn (newspaper). https://www.dawn.com/news/331100/hyderabad-renovated-rani-bagh-awaits-visitors. பார்த்த நாள்: 7 September 2020. 
  3. HYDERABAD: Timely completion of project urged: Rani Bagh development Dawn (newspaper), Published 2 November 2006, Retrieved 7 September 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_பாக்&oldid=3414988" இருந்து மீள்விக்கப்பட்டது