இராணி எலிசபெத் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Queen Elizabeth Islands, northern Canada.
  Nunavut
  Northwest Territories
  Quebec
  Greenland

இத்தீவுகள் கனட ஆர்டிக் தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுக் கொத்துகளில் ஒன்றாகும். (பிரெஞ்சு மொழிழியில் ஐல் டி லெ இரயினே எலிசபெத் முன் காலங்களில் பாரிஸ் தீவுகள்), இத்தீவுகள் ஏறத்தாழ இவ்வுலகின் 14% பனியாறுகள் மற்றும் பனிமுகப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் கிரீன்லாந்து தீவுகள் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள உள்நாட்டு பனிப் படிவுகள் கணக்கில் வராது.

புவி அமைப்பு: இந்த தீவு 419,016 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இது 1953இல் இங்கிலாந்து நாட்டு அரசி எலிசபெத் II அவர்கள் கனடா நாட்டின் இராணியாக மகுடம் சூட்டிய பிறகு இராணி எலிசபெத் தீவுகள் என மறு பெயரிடப் பட்டது. இந்த் தீவு ஏறக்குறைய ஒரு செங்குத்து முக்கோணம் போன்ற பரப்பைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கு எல்லையாக நார்ஸ் நீர்ச்சந்தி  தெற்கில் பாரி கால்வாய் மற்றும் வடக்கு மற்றும் மேற்கு ஆர்டிக் பெருங்கடல் எல்லைகளாக உள்ளது. கனடாவின் இயற்கை வள மையம் இத்தீவுகளைக் கண்காணித்து வந்தாலும் இங்கு மக்கள் தொகை மிகக் குறைவே. 1960 இல் பான் ஆர்டிக் எண்ணெய் நிறுவனம் ஸ்வெர்ட்ரப் மற்றும் ஃப்ரங்கிளினன் ஆற்று வடிநீர் பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் உள்ளதாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. மேலும் இது இராணி எலிசபெத் தீவுக்கூட்டத்தில் தன் ஆராய்ச்சியை நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால் 1970 இதன் எண்ணெய் உற்பத்தி நின்று விட்டது. 2013இல் நடெபெற்ற புவி மாநாட்டில் ஆர்டிக் பகுதியில் கனட்டாவின் எண்ணெய் எடுப்பு பகுதிகள் நிரந்தரமாக கடைசி பெட்ரோலிய ஆராய்ச்சி முன்னனணி பகுதியாக அறிவிக்கப் பட்டது, ஹாக் மற்றும் எனசெஸ்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் நவீனப் படுத்தப்பட்டுள்ள நில மற்றும் நீர் நில நடுக்க தொழிற்நுட்பங்களை இங்கும் உபயோகிக்கலாம் என்று விவாதித்தது.[1] 1616இல் முதன்முதலில் ஐரோப்பியர்களால் காணப்பட்ட இராணி எலிசபெத் தீவுகள் பிரித்தானிய அரசின் வடகிழக்கு பாதை அதை ஆராய்ச்சி செய்யும் வரை முழுவதும் ஆராயப் படவில்லை . பத்தொன்பதாம் நூற்றாண்டில் நார்வே நாடு முழுவதும் சென்று ஆராய்ந்தது. இத்தீவுகள் 130 வருடங்கள் பாரி தீவுக்கூட்டங்கள் என்றே அழைக்கப் பட்டது. இவைகள் முதலில் இதை ஆராய்ந்த சர்.வில்லியம் பாரி எனும் ஆராய்ச்சியாளரின் பெயரால் அழைக்கப் பட்டது. இவர் 1820 ஆம் ஆண்டு ஹெக்லா எனும் கப்பலில் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்தார். 1953இல் இத்தீவுக் கூட்டத்திற்கு வேறு பெயரிட்ட பிறகு பாரி தீவுகள் எனும் பெயர் மீதமிருந்த தீவுகளுக்கு தொடர்ந்து வழங்கப் பட்டது. எனவே இந்த உள்நாட்டு தீவுக்கூட்டங்கள் கீழ்கண்டவாறு மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டது.

  • எல்ஸ்மீர் தீவுகள்
  • ஸ்வெர்ட்ரப் தீவுகள்
  • பாரி தீவுகள்

எல்ஸ்மீர் தீவுகள் வடஎல்லையில் காணப்படுகிறது மற்றும் இவை மிகப் பெரியவையாகும். ஸ்வெர்ட்ரப் தீவுகள் எல்ஸ்மீர் தீவுக்கு மேற்காகவும் நார்வேஜியன் வளைகுடாவிற்கு வடக்காகவும் உள்ளது. மீதமுள்ள தீவுகள் பாரி கால்வாய்க்கு வடக்காகவும் இன்னும் தெற்கு மற்றும் மேற்கு திசையிலுக் காணப் படுகின்றன, இவை பாரித் தீவுகள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. 1953 வரை எல்ஸ்மீர் மற்றும் ஸ்வெர்ட்ரப் தீவுகள் கூட இந்த பெயரில்தான் இருந்தன. பெருந்தீவுகள்: இங்குள்ள அநேகத் தீவுகள் உலகிலேயே பெருந்தீவு வகைகளைச் சார்ந்தவையே. அவைகளில் மிகப் பெரியது எல்ஸ்மீர் தீவாகும். அமண்ட் ரிங்னெஸ் தீவுகள், அலெக்ஸ் ஹெல்பெர்க் தீவுகள், பாத்ரஸ்ட் தீவுகள், பார்டன் தீவுகள், கார்ன்வால் தீவுகள் மற்றும் கார்ன்வாலிஸ் தீவுகள் மற்ற பெரிய தீவுகளாகும். மெல்வில் மற்றும் தேவான் தீவுகளும் இதில் அடங்கும். இவைகளின் மொத்த பரப்பளவு 150,000 சதுர மைல்களாகும். (390,000 சதுர கி.மீ). இந்த தீவுகள் 1615-16களில் ஆங்கில மாலுகிகளான வில்லியம் பாஃபின் மற்றும் ராபர்ட் பைலாட் பகுதியளவு ஆராயப் பட்டிருக்கலாம் ஆனால் இதை முதன் முதலில் பார்வையிட்டவர்கள் கி.பி1000இல் வைகிங்களாய் இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.[2]    சிறிய தீவுகள்: மற்ற சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க தீவுகளாவன பீச்சே தீவுகள் இங்கு அதிகாரி ஜான் டாரிங்டன், ராஜ கடற்படை அதிகாரி வில்லியம் ப்ரேய்ன் மற்றும் திறமையான மாலுமி ஜான் ஹர்ட்னெல் ஆகியோரின்  கல்லறை உள்ளது. பறவைகள் வாழ முக்கியமான மூன்று தீவுகள், பறவைகள் வலசை போகும் முக்கிய நில வாழிடம் அண்ட் ஸ்கேரேலிங் தீவு ஆகியவை மூன்று முக்கிய சிறு தீவுகளாகும். இதில் ஸ்கேரேலிங் தீவானது அகழ்வாராய்ச்சிக்கு முக்கியமான இடமாகும். மக்கள் தொகை: இங்கு மக்கள் தொகை நெருக்கம் மிகக் குறைவு. 400 பேருக்கும் குறைவான மக்கள் தொகையைக் கணக்கிட்டால் இங்கு மனித நடமாட்டமே இல்லை என்று கூறலாம். மூன்றே மூன்று நிரந்தரமான மக்கள் வாழிடங்கள் மட்டுமே இங்கு உண்டு. இரண்டு நகராட்சி அலுவலகங்கள் உண்டு. ஒன்று கார்னிவெல் தீவில் உள்ள குக்கிராமம் (2006 கணக்கெடுப்பின் படி 229 பேர்) மற்றொன்று எல்ஸ்மீர் தீவில் உள்ள கிரீஸ் ஃபியார்டு என்ற இடத்தில் மற்றொன்று(2006 கணக்கெடுப்பின் படி 141 பேர்).  கனடாவின் சுற்றுச்சூழல் காலநிலை நிலையம் மற்றும் புவி வளிமண்டல கண்காணிப்பு நிலையம் , எல்ஸ்மீரி தீவில் உள்ள வளிமண்டலத்தை கண்காணிக்கும் சோதனை நிலையம் ஆகியவற்றில் அநேக தற்காலிகமாக வாழ்பவர்கள் அநேகர் இங்கு உண்டு. யுரேகா எனும் சிறிய ஆராய்ச்சி நிலையத்தில் எட்டு பணி செய்பவர் உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர். இந்த நிலையமும் எல்ஸ்மீர் தீவில் தான் உள்ளது. ஆனால் இங்கு ஒருவர் கூட வாழவில்லை.   கனடாவின் தேச வரை படத்தின் படி இங்குள்ள தீவுக் கூட்டத்தில் 34 பெருந் தீவுகளும் 2,092 சிறு தீவுகளும் காணப் படுகின்றன.

நிர்வாகம்[தொகு]

1999 வரை இத்தீவுகள் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள பஃபின் பிரதேசத்தின் ஒரு அங்கமாக இருந்தது. 1999 இல் நுனாவெட் பகுதி உருவாக்கப் பட்ட போது சிறு தீவுகளும், 110 ஆவது மேற்கு தீர்க்க ரேகையின் தீவுக் கொத்தின் அங்கமான மிகச் சிறிய தீவுக் துகள்களும் கியூக்கிட்டாலுக் எனும் புதிதாய் உருவாக்கப் பட்ட பகுதியின் அங்கமாக மாறியது. இந்த புதிய பகுதியே இத்தீவுக் கொத்தின் மிகப் பெரிய பகுதியை உருவாக்குகிறது. மீதமுள்ள தீவுகள் தற்போது குறைக்கப் பட்ட வட மேற்கு பிரதேசத்தின் பகுதிகளாக மாறியது. போர்டன் தீவுகள், மெகென்ஸி கிங் தீவுகள் மற்றும் மெல்வைல் தீவுகள் இந்த இரண்டு பிரதேசங்களுக்கும் இடையில் பிரிக்கப் பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hogg, John R.; Enachescu, Michael E (2013), Reviving Exploration in the Arctic Islands: Opportunities and Challenges from an Operator's Perspective, Calgary, Alberta {{citation}}: |access-date= requires |url= (help); Unknown parameter |conference= ignored (help)CS1 maint: location missing publisher (link)
  2. "Sea islands". Atlas of Canada. Archived from the original on January 22, 2013. பார்க்கப்பட்ட நாள் January 22, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_எலிசபெத்_தீவுகள்&oldid=3924655" இலிருந்து மீள்விக்கப்பட்டது