உள்ளடக்கத்துக்குச் செல்

இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில்

ஆள்கூறுகள்: 11°12′28″N 77°42′36″E / 11.207880°N 77.709875°E / 11.207880; 77.709875
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில்
இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில் is located in தமிழ் நாடு
இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில்
காலபைரவர் கோயில், இராட்டைசுற்றிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு மாவட்டம்
அமைவு:இராட்டைசுற்றிபாளையம்
ஏற்றம்:260 m (853 அடி)
ஆள்கூறுகள்:11°12′28″N 77°42′36″E / 11.207880°N 77.709875°E / 11.207880; 77.709875
கோயில் தகவல்கள்

காலபைரவர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் இராட்டைசுற்றிபாளையம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பைரவர் கோயில் ஆகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 11°12′28″N 77°42′36″E / 11.207880°N 77.709875°E / 11.207880; 77.709875 ஆகும்.

சிவபெருமானின் 64 திருவுருவங்களை நினைவுபடுத்தும் வகையில் 64 வெவ்வேறு பைரவர் வடிவங்கள் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன.[2]

இக்கோயில் 'தென்னக காசி' என்றும் குறிப்பிடப்படுகிறது.[3]

ஆசியாவின் மிகப்பெரிய பைரவர் கோயில் என்று போற்றப்படும் இக்கோயிலின் நுழைவு வாயில் 39 அடி உயரமுள்ள பைரவர் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.[4] இது பஞ்சலோகத்தினால் ஆனது.[5] இந்த பைரவர் சிலையின் எடை சுமார் 650 கிலோகிராம் ஆகும்.[6]

இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ஆம் நாள் நடைபெற்றது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில்... பக்தர்களுக்கு பேரருள்... இன்னும் 4 மாதங்கள் தான்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  2. செல்வகுமார் (2022-12-05). "Bhairava temple: மிகப்பெரிய பைரவர்.. இவ்வளவு சிறப்பா? மகா கும்பாபிஷேக விழா எப்படியிருக்கும்?". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  3. Velmurugan s. "தென்னக காசியான ஈரோடு பைரவர் ஆலய கும்பாபிஷேகம்; பல மாநில பக்தர்கள் பங்கேற்பு". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  4. பொ.பாலாஜிகணேஷ் (2022-12-26). "ஆசியாவின் மிகப்பெரிய பைரவர் கோயில்!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  5. "உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா எப்போது தெரியுமா?". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  6. C.Elumalai (2022-12-04). "64 வடிவங்கள்.. 650 கிலோ எடை.. உலகின் மிக உயரமான பைரவர் சிலை அமைப்பு". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  7. தினத்தந்தி (2022-11-22). "அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையத்தில் 39 அடி உயர பைரவர் கோவில் கும்பாபிஷேகம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.

வெளி இணைப்புகள்[தொகு]